Published : 12 Apr 2016 04:18 PM
Last Updated : 12 Apr 2016 04:18 PM
திமுக தேர்தல் அறிக்கையில் ரப்பர் தொழிற்சாலை உட்பட குமரி மாவட்டத்தில் 6 தொகுதி பிரச்சினைகளின் முக்கிய அம்சங்களும் இடம்பெற்றதால் திமுக., காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வேட்பாளர் தேர்வுக்கு முன்னரே பிரச்சாரத்திற்கான அறிக்கையை ஒலிப்பதிவு செய்யும் ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில் இதற்கு முந்தைய தேர்தல்களில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்ற கூட்டணியாக காங்கிரஸ்- திமுக இருந்துள்ளது.
திமுக-காங் உற்சாகம்
இம்முறை கிள்ளியூர், விளவங் கோடு, குளச்சல் ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநா பபுரத்தில் கடந்த தேர்தலை போலவே திமுக போட்டியிட உள் ளதாக தெரிகிறது. இதற்கிடையே திமுகவின் தேர்தல் அறிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்கட்சியினரை மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின ரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி யுள்ளது.
நெய்யாறு கால்வாய்
காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘திமுக தேர்தல் அறிக்கை தான் கூட்டணி கட்சியான எங்களுக்கும் கதாநாயகன். இதில் உள்ள அம்சங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றாலே தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை எட்டிவிடுவோம்.
பல ஆயிரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளவங் கோடு நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்சினை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இக்கால்வாயை தூர்வாரி செப்பனி டுவதுடன் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிநாடாவில் பதிவு
இதேபோல் குளச்சல் தொகுதி யில் ஏவிஎம் கால்வாயை தூர்வாரு வதுடன், மீண்டும் நீர் போக்கு வரத்து உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளனர். மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைக் கப்படும் எனத் தெரிவித்திருப்பதன் மூலம் பல லட்சம் ரப்பர் விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீண்டும் மேலோங்கும்’ என்றார் அவர்.
தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அறிக்கையை பரவலாக பயன் படுத்துவதற்காக அவற்றை ஒலிநாடாவில் பதிவு செய்யும் பணியில் திமுகவினர் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.
வைகுண்டருக்கு மணிமண்டபம்
திமுக தரப்பில் கூறும்போது, ‘அய்யா வைகுண்டருக்கு கன்னியாகுமரியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறு தியை இதுவரை எந்த கட்சி யும் அளித்ததில்லை. இது கன்னியா குமரி தொகுதி மட்டுமின்றி பிற தொகுதி வாக்குகளையும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு பெற்றுத் தரும்.
மேலும் தச்சன்விளையில் விடுதலை போராட்ட தியாகி அனந்தபத்மநாபன் நாடாருக்கு மணிமண்டபம் கட்டுவதாக தெரிவித்திருப்பதும் அனைத்து தரப்பினரும் ஏற்கும்படி உள்ளது. கோட்டாறில் குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, நாகர்கோவில் செட்டிக்குளம் அரசு பேருந்து பணி மனை சீரமைப்பு, நாகர்கோவில் நகர பகுதி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சுற்றுச்சாலை அமைப்பது போன்றவை சிறந்த திட்டங்கள்’ என்றனர்.
90 சதவீதம் பலன்
மீனவர்களின் வாக்குகளை குறிவைத்து கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களை இணைக்கும் சாலை, இரையுமன்துறையில் பாலம், ராஜாக்கமங்கலத்தில் பாலம் போன்ற வாக்குறுதியும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதனால் திமுக தேர்தல் அறிக்கையை மட்டும் சொல்லி வாக்குகேட்டாலே எங்கள் பிரச்சாரத்துக்கு 90 சதவீதம் பலன் கிடைத்துவிடும் என்ற உற்சாகத்தில் திமுகவினர் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT