Published : 20 Mar 2022 04:40 PM
Last Updated : 20 Mar 2022 04:40 PM
சென்னை: யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதுதான் இந்த வேளாண் பட்ஜெட் என்று தேமுதி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் வியயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “எதிர்காலத்திற்கு தேவையான ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதுதான் இந்த வேளாண் பட்ஜெட். விவசாயத்திற்கு மிக முக்கிய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது, தமிழக நதிகளை இணைப்பது போன்ற அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
வேளாண் பல்கலைகழகங்கள், கல்லூரி அறிவுப்புகள் பட்ஜெட்டில் இல்லை. மணல் சுரண்டலை தடுப்பது. கருவேல மரங்களை அகற்றி விளை நிலங்களாக மாற்றுவது போன்ற அறிவிப்புகள் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT