Published : 11 Apr 2014 12:20 PM
Last Updated : 11 Apr 2014 12:20 PM
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனையும் அதற்கு உடந்தையாக இருந்த கணவனின் காதலிக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த அபு சிக்கந்தர், அம்பத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். 1996-ம் ஆண்டு சகாயமேரி என்ற பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடை பெற்றது. இந்நிலையில், சிக்கந்தருக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த புனிதபிரியா என்ற பெண் ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சிக்கந்தரும் புனிதபிரியாவும் சகாயமேரியை கொடுமைப் படுத்தியுள்ளனர். இதனால், மனம் உடைந்த சகாயமேரி, 2003-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சௌந்தர்ராஜன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார்.
அதில், மனைவியை கொடு மைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதற்காக அபுசிக்கந்தருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த புனித பிரியாவுக்கு 6 ஆண் டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் மூவாயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT