Published : 19 Mar 2022 04:15 AM
Last Updated : 19 Mar 2022 04:15 AM

அரசு குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படாததால் வீணாகும் நெல் மூட்டைகள்: ராஜபாளையம் விவசாயிகள் வேதனை

விருதுநகர்

ராஜபாளையம் அருகே விவ சாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்த நெல் மூட் டைகள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படாததால் வெயிலில் காய்ந்து வீணாகின்றன.

ராஜபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவ சாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயி களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக சேத்தூர், மேட்டுப் பட்டி, முகவூர், தேவதானம், கோவிலூர் உட்பட 6 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு கடந்த 2 மாதங்களாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் சேத்தூர் காவல் நிலையம் அருகே திறந்த வெளியில் குவித்து வைக் கப் பட்டுள்ளன. சுமார் 500 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் வெயிலிலேயே காய்ந்து வருகின்றன. இதனால் நெல் மூட்டைகள் எடை இழப்பும், அரசுக்கு இழப்பும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லாமல் திறந்த வெளியில் வெயிலில் காய்வதால் விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடம் கேட்டபோது, வாகனம் இல்லாததால் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. அனைத்து நெல் மூட்டைகளையும் விரைவில் கிடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x