Published : 18 Mar 2022 03:39 PM
Last Updated : 18 Mar 2022 03:39 PM
சென்னை: 2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரலின் முழு விவரம்:
19-03-2022: 2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.
20-33-2022: அரசு விடுமுறை
21-3-2022:
இரங்கற் குறிப்புகள்
(1) சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து.
இரங்கல் தீர்மானம்:
(2) பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு குறித்து.
(3) 2022-2023 -ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் தொடங்கும்.
22-3-2022, 23-3-2022: 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொதுவிவாதம் நடத்தப்படும்.
24-3-2022:
(1) 2022-2023 ஆம் ஆண்டின் செல்விற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் - பேரவை முன் வைக்கப்படும்.
(2) 2021-2022-ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிக்கப்படும்.
(3) 2021-2022-ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் துணை மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். (விவாதமின்றி)
(4) 2021-2022-ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் துணை மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு - அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடக்கும். (விவாதமின்றி)
(5) 2022-2023-ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். (விவாதமின்றி)
(6) 2022-2023-ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைககள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு - அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடக்கும். (விவாதமின்றி)
(7) 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்குப் பதிலுரை அளிக்கப்படும்.
இத்துடன் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT