Published : 30 Apr 2016 08:55 AM
Last Updated : 30 Apr 2016 08:55 AM
சுயேச்சைகளாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, தேர்தல் ஆணையம் வைத்துள்ள பட்டியலில் இருந்து, அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஒரு சில தேர்தல்களுக்கு முன்னதாக, சுயேச்சைகளுக்கான சின்னங்களாக விலங்குகளை தேர்தல் ஆணையம் வைத்திருந் தது. ஆனால், தேர்தல் சின்னங் களாக அடையாளமிடப்பட்ட விலங்குகளை, பிரச்சாரத்துக்காக துன்புறுத்துவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, சின்னங்கள் பட்டியலில் இருந்து விலங்குகள் நீக்கப்பட்டன.
நடப்பு தேர்தலில் காய்கறிகள், உணவுப் பொருட்கள், விளை யாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட 106 சின்னங்களை தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது. காய்கறிகளில், வெண்டைக்காய், தர்பூசணி, திராட்சை, தேங்காய், காலி பிளவர், பட்டாணி, பச்சை மிளகாய் ஆகியவை சுயேச்சைகளுக்கான சின்னங்களாக ஒதுக்கப்பட்டுள் ளன. ரொட்டி, பிஸ்கட், சாப்பாட் டுடன் தட்டு, கப்புடன் சாஸர், சப்பாத்திக் கட்டை, திருக்கை (திருவி), புட்டி (பாட்டில்), தேநீர் வடிகட்டி, வாணலி, மிக்ஸி, ஃபிரிட்ஜ், செஸ் போர்டு, கேரம் போர்டு, கிரிக்கெட் பேட், ஹாக்கி பேட், கிரிக்கெட் வீரர், டென்னிஸ் மட்டையு பந்து ஆகியவையும் சுயேச்சைகளுக்கான சின்னங் களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT