Published : 06 Jun 2014 10:11 AM
Last Updated : 06 Jun 2014 10:11 AM

நீரில் மூழ்கியது குந்தா மின் நிலையம்: ராட்சத குழாய் வெடித்ததால் விபரீதம்

உதகை காட்டுகுப்பையில் 30 மெகாவாட் மின்திறன் உள்ள குந்தா மின் நிலையத்தில் ராட்சத குழாய் வெடித்து மின் நிலையத்தின் 3 அடுக்குகள் தண்ணீரில் மூழ்கின.

நீலகிரி மாவட்டத்தில் அவ லாஞ்சி, காட்டுகுப்பை, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயார், பார்சன்ஸ் வேலி, கிளன்மார்கன், மரவகண்டி, சிங்காரா ஆகிய 12 நீர் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம், 833 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், பழமையான இயந்திரங்கள் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் நாள்தோறும் 750 மெகாவாட் வரை மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மின்சாரம் ஈரோட்டில் உள்ள மின் பகிர்மான வட்டத் துக்கு அனுப்பப்பட்டு அங்கி ருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மாநில மின் பகிர்மான வட்டத்தின் உத்தரவு களின்கீழ் விநியோகிக்கப்படுகிறது.

குந்தா 6 மின் நிலையமாக செயல்படுவது எமரால்டு அருகே காட்டுகுப்பை மின் நிலையம். கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நீர் மின் நிலையம் 30 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டது. போர்த்திமந்து மற்றும் பைக்காரா அணைகளின் நீரைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தி பாதிப்பு

வடகிழக்குப் பருவ மழை மற்றும் கோடை மழை போதிய அளவு பெய்யாததால் மின் உற்பத்திக்கான அப்பர்பவானி, பைக்காரா, போர்த்திமந்து, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பைக்காரா மற்றும் போர்த்திமந்து அணைகளில் தண்ணீர் இல்லாத தால் காட்டுகுப்பை மின் நிலையத் தில் மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு 7 மணி அளவில் காட்டுகுப்பை மின் நிலையத்தில், மின் உற்பத்திக்காக தண்ணீர் கொண்டு வரப்படும் ராட்சத குழாய் திடீரென வெடித்தது. இதனால், அணையிலிருந்து நீர்மின் நிலையத் தினுள் தண்ணீர் புகுந்தது. தண்ணீரை கட்டுப்படுத்த முடியாத தால் தொழிலாளர்கள் உயிர் பிழைக்க வெளியேறினர்.

இந்த மின் நிலையத்தில் ‘பென்ஸ்டாக்’ எனப்படும் தண்ணீரை நிறுத்தும் வசதியில்லை. இதனால் பைக்காரா மற்றும் போர்த் திமந்து அணைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின் நிலையத் துக்குச் செல்லும் தண்ணீரை நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், மின் நிலையத்தில் நில மட்டத்திலிருந்து கீழ் உள்ள 3 அடுக்குகள் தண்ணீர் மூழ்கின.

மின் நிலையத்துக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் வாரியத்தினர், கீழ் தளங்களுக்கான மின் இணைப்பை துண்டித்தனர். ராட்சத மோட்டார்கள் மூலம் கீழ் தளங்களை சூழ்ந்த நீரை வெளியேற்றி வருகின்றனர்.

மின் உற்பத்தியில் சிக்கல்

மின் நிலையம் தண்ணீரில் மூழ்கியதால், மின் உற்பத்தி மேற்கொள்ள குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாகும் என மின் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு கேள்விக்குறி?

காட்டுகுப்பை பகுதியில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க சுரங்கம் தோண்டு பணி நடந்தபோது கடந்த மாதம் 17ம் தேதி அப் பகுதியில் பணி புரிந்த மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரோடு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x