Published : 17 Apr 2016 10:22 AM
Last Updated : 17 Apr 2016 10:22 AM
தங்களுக்கு தேர்தலில் வாய்ப் பளிக்கப்படாததன் பின்னணியில் அழகிரியின் அழுத்தம் இருப் பதாக சந்தேகிப்பதாக அழகி ரியை கடுமையாக விமர்சித்த அவரது முன்னாள் ஆதரவாளர் கள் தெரிவிக்கின்றனர்.
முன்பு, மதுரை திமுக-வில் அழகிரி வைத்ததுதான் சட்டமாக இருந்தது. ஸ்டாலின் தலையிட ஆரம்பித்ததும் மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, இளைஞரணி அமைப்பாளர் ஜெயராம், புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி என அழகிரி விசுவாசிகள் ஸ்டாலின் அணிக்குத் தாவினர். முன்னாள் துணை மேயர் மன்னன் மட்டுமே இந்த நிமிடம் வரை அழகிரிக்கு விசுவாசியாக இருக்கிறார்.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு அழகிரியின் முன்னாள் விசுவாசி கள் பலரும் விருப்ப மனு கொடுத்திருந்தனர். இவர்களில் மூர்த்தி, தளபதி தவிர மற்ற அனைவருக்கும் வாய்ப்பு மறுக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய அழகி ரியின் முன்னாள் விசுவாசிகள், ‘ஸ்டாலின் தைரியம் கொடுத்த பிறகு ஜெயராம், முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குரு சாமி, பொன்.முத்துராமலிங்கம் போன்றவர்கள் அழகிரியை கடுமையாக விமர்சித்துப் பேசி னார்கள். ஆனால், அவர் களை இந்தத் தேர்தலில் ஸ்டாலின் கைவிட்டுவிட்டார். இவர்கள் தவிர, முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன் னாள் மாநகர் மாவட்டச் செய லாளர் வேலுச்சாமி, எஸ்ஸார் கோபி, பொன்.முத்து மகன் சேதுராமலிங்கம் ஆகி யோரும் தங்களுக்கு ஏற்ற தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்திருந்தனர். அவர்களுக் கும் இதே நிலைதான்.
ஸ்டாலினுக்கு ஆதரவாக மாறிய இவர்களில் ஒருவருக்குக் கூட சீட் வழங்கப்படவில்லை. அதேநேரம், இங்கேயும் அங்கேயுமாய் விசுவாசம் காட் டிக் கொண்டிருந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மதுரை யில் தன்னை எதிர்த்தவர்களை ஓரங்கட்ட அழகிரியும் அழுத்தம் கொடுத்திருப்பாரோ என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
வழக்கமாக, தேர்தல் சமயத் தில் திமுக-வில் செயற்குழு, பொதுக்குழு, உயர்நிலை செயல்திட்டக் குழுவை கூட்டி யாருடன் கூட்டணி, மக்களின் மனநிலை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்தெல்லாம் விவா திக்கப்படும். ஆனால், இந்த முறை அப்படி எந்த நடை முறையும் பின்பற்றப்படாமல் யார் யாரோ விருப்பப்படி வேட் பாளர்களை தேர்வு செய்திருக் கிறார்கள். கட்சிக்காக உழைத்த பலபேர் இருக்க அவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, கட்சி யில் பிடிப்பில்லாத பி.டி.ஆர்.பி.தியாகராஜன் போன்ற வர்களை வலியக் கூட்டிவந்து களத்தில் நிறுத்தி இருப்பது இப்படித்தான். இதனால்தான் பல இடங்களில் வேட்பாளர்களை மாற்றக்கோரி போராட்டங்கள் நடக்கின்றன. நிச்சயம் இந்த நடவடிக்கைகளால் கட்சியின் வெற்றி பாதிக்கப்படும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT