Published : 11 Apr 2016 04:44 PM
Last Updated : 11 Apr 2016 04:44 PM

மதுரை மேற்கு தொகுதியில் கரை சேருவாரா அமைச்சர்?

ஒரு முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மூன்று அமைச்சர்களை தந்த மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் கே. ராஜூவுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் வெற்றிக்காக அவர் கடுமையாக போராட வேண்டிய நிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மதுரை மேற்குத் தொகுதியில் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான செல்லூர் கே. ராஜூ, மீண்டும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்தமுறை தேர்தல் பிரச்சார த்தில் செல்லூர் கே. ராஜூ அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமு கவில் இவருக்கு எதிரான தரப்பினர் சி.டி. வெளியிட்டு சில மாதங்களுக்கு முன் பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர். அதிமுக உட்கட்சிப் பூசலில் இவரது அலுவலகம், மாவட்டச் செயலாளர் அலு வலகத்தில் வெடிகுண்டுகள் வீசப் பட்டன.

அதனால், செல்லூர் கே. ராஜூ இந்த முறை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றிபெறுவது சிரமம் என்பதால், தனது வசிப்பிடம் இருக்கும் மதுரை வடக்கு தொகு திக்கு மாற நினைத்தார். ஆனால், கட்சித் தலைமை இவரை மீண்டும், மேற்கு தொகுதியிலேயே களம் இறக்கி உள்ளது. மேயராக இருந்த வி.வி. ராஜன்செல்லப்பா வடக்குத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டார். அதனால், தற்போது அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தான் வெற்றி பெறுவதோடு மேயரையும் வெற்றிபெற வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்ப ட்டுள்ளார். வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது, காளவாசல் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்கு வரத்து நெரிசல், மாடக்குளம் கண்மாய் ஆழப்படுத்துதல், ஆரப் பாளையம் பேருந்து நிலையம் மாற்றம், உத்தங்குடி-சமயநல்லூர் சுற்றுச்சாலை அமைப்பது உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப் படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு, இந்த தொகுதியின் பிரதான பிரச் சினையாக உள்ளது.

அமைச்சராக இருந்த செல்லூர் கே. ராஜூ, அரசின் முக்கிய திட்ட ங்களை, மதுரை மாவட்டத்துக்கும், சொந்த தொகுதிக்கும் கொண்டு வரவில்லை எனக் கூறப்படுகிறது. திமுகவும் இத்தொகுதியில் களம் இறங்குகிறது. திமுகவில் மக்கள் செல்வாக்குள்ள முக்கிய விஐபி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் செல்லூர் கே. ராஜூ, இந்த முறை வெற்றிபெற கடுமையாகப் போராட வேண்டிய நிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

எம்ஜிஆர் வெற்றி பெற்ற தொகுதி

1967-ல் உருவான இத்தொகுதி, மறுசீரமைப்பில் பெரும்பாலான பகுதிகள் வேறு தொகுதிக்கு மாற்றப்பட்டன. 1967 முதல் 12 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐக்கிய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி தலா ஒருமுறையும், திமுக 3 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1980-ம் ஆண்டு எம்ஜிஆரின் அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு தேர்தல் நடந்தது. அதே ஆண்டு நடந்த தேர்தலில், இந்த தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்டு 21 ஆயிரத்து 56 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இந்த தொகுதியில் கடந்த காலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்.முத்துராமலிங்கம் (திமுகு), வளர்மதி ஜெபராஜ் (அதிமுக), செல்லூர் கே. ராஜூ (அதிமுக) ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர். திமுகவை சேர்ந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், இங்கு போட்டியிட்டு சட்டப்பேரவைத் தலைவரானார். ஒரு முதலமைச்சர், மூன்று அமைச்சர்கள், ஒரு சபாநாயகரை தந்த இந்த தொகுதி, தற்போது வரை முன்னேற்றம் அடையாமல் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x