Published : 08 Mar 2022 08:41 PM
Last Updated : 08 Mar 2022 08:41 PM

’சக பயணிகளை வாழ்த்துகிறேன்’ - பிரபலங்களின் கவனம் ஈர்த்த மகளிர் தின பதிவுகள்

சர்வதேச மகளிர் தினம் இன்று உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்களும், பிரபலங்களும் தங்களுக்கே உரிய பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சில...

தமிழக முதல்வர் ஸ்டாலின்: சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாதம் மாறட்டும்! அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே! புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணைநிற்கும்! மகளிர் தின வாழ்த்துகள்!

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: பெண்கள் மேம்பாட்டிற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. எங்கு பெண்களுக்கு சமமான கல்வி, சமமான சொத்துரிமை கிடைக்கிறதோ அங்கு தான் உண்மையான வளர்ச்சி ஏற்படுகிறது. மகளிர் தினம் என்பது உண்மையில் சமூக மேம்பாட்டு தினமாகும். உலக மகளிர் தின வாழ்த்துகள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: தேவதையென்றோம். தெய்வம் என்றோம். யதார்த்தம் உணர்ந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவியென்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடையாளமான பெண்கள் தினத்தில் சக பயணிகளை வாழ்த்துகிறேன்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்: நான் வீனாவின் மகன், கவிதா, நீலமின் சகோதரன், கஜோலின் கணவன், நைசாவின் தந்தை.

ராதிகா சரத்குமார்: உங்கள் பயணத்தை யாராலும் எடுத்துச் செல்ல முடியாது என்று நம்புங்கள். இது ஒரு வலுவான நம்பிக்கை. உங்களை நம்புங்கள். அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்.

நடன இயக்குநர் ஃபரா கான்: ஃபரா கான் தன் மகனுக்கு தான் ஒரு பெண்ணியவாதி என்ற டீ- சர்ட்டை அணிவித்து அனைவருக்கு மகளிர் தின வாழ்த்தை தெரிவித்தார்.

நடிகர் மகேஷ் பாபு: ”அழகு, புத்திசாலித்தனம், இரக்கம்,நெகிழ்ச்சி... என்னுடைய பெண்கள் அனைவரும் மாற்றத்தை ஊக்குவிக்குகிறார்கள்” என்று தனது மனைவி, மகள், தாயின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

சிவகார்த்திகேயன்: "அனைத்து பெண்களுக்கும் மகளி தின வாழ்த்துகள். பெண்மையை தினமும் போற்றுவோம்."

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x