Published : 05 Mar 2022 06:24 AM
Last Updated : 05 Mar 2022 06:24 AM

ரூ.564 கோடி மோசடி; பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகி கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: ரூ.564 கோடி மோசடி செய்த தாக பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகி அகமது ஏ.ஆர் புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் பண மோசடி செய்ததாக கடந்த 2018-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

குறிப்பாக 2011-12 மற்றும் 2014-15-ம் ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என ஏமாற்றி மோசடியாக அரசுக்கு விற்பனை செய்து குற்ற சதியில் ஈடுபட்டதாக வருவாய் புலனாய்வு இயக்ககம் மேற்கொண்ட விசார ணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டது.

இதற்காக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாகியான அகமது ஏ.ஆர்.புகாரி மற்றும் சில பொதுத்துறை நிர்வாகிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்தியவிசாரணையில் தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில், போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து சுமார் ரூ.564 கோடிசம்பாதித்தது தெரியவந்தது.

சட்ட விரோதமாக மோசடி செய்தகோடிக்கணக்கான பணத்தை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பரிமாற்றம் செய்துஅதை மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு, சட்ட விரோதமாக பணம்பரிமாற்றம் செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பண பரிமாற்றசட்டத்தின் கீழ் அகமது புகாரியின் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

அகமது புகாரி சொந்தமாக தூத்துக்குடியில் மின் நிலையம் ஒன்றை உருவாக்கி மின் உற்பத்திசெய்து வருவதாகவும், தமிழகத்துக்கு தேவைப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் குறிப்பிட்ட சத விகிதம் இவரது நிறுவனம் விநியோகம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில், போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து சுமார் ரூ.564 கோடி சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x