Published : 01 Apr 2016 08:33 AM
Last Updated : 01 Apr 2016 08:33 AM
லாரி மற்றும் வேன்களில் ‘கட்டாயம் வேக கட்டுபாட்டு கருவியை பொருத் தும் சட்டம்’ இன்று முதல் (ஏப்ரல்-1) அமலாகிறது. வாகனங்களில் வேகக் கட்டுபாட்டு கருவி பொருத்தா விட்டால் அவற்றை இயக்குவதற் கான எப்.சி (தகுதி சான்று) வழங்கப்படாது என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறக்கின்றனர். வாகனங்கள் வேகமாக செல்வது சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் ஏற்கெனவே வேக கட்டுபாட்டு கருவிகள் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையே லாரி, வேன் உட்பட கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், ஒன்பது இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் ஆகிய அனைத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் புதிய உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 11 லட்சம் லாரிகளில் சுமார் 4.5 லட்சம் லாரிகளுக்கு வேக கட்டுபாட்டு கருவியை பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள் சிலர் வேக கட்டுபாட்டு கருவியை பொருத்தி வருகின்றனர். மற்றொரு தரப் பினர் இதற்கு எதிர்ப்பு தெரி வித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதில், ஒன்றுதான் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தும் சட்டமாகும். லாரி, வேன் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களிலும் கட்டாயம் வேக கட்டுப்பாட்டு கருவியை ஏப்ரல் 1-ம் தேதிக்குள் பொருத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, ஆர்டிஓக்கள் (வட்டார போக்குவரத்து அலுவலர்கள்) தலைமையில் வாகனங்களில் விரைவில் சோதனை நடத்தப்படும். லாரி உள்ளிட்ட கனரக வாக னங்களில் வேக கட்டுபாட்டு கருவிகள் பொருத்தாவிட்டால் வாகனம் இயக்குவதற்கான எப்.சி (தகுதிசான்று) வழங்கப்படாது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT