Published : 03 Mar 2022 07:44 AM
Last Updated : 03 Mar 2022 07:44 AM

3-வது புதிய பாதை வந்துள்ளதால் 25% தாம்பரம் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக இருக்கிறது.

போதிய ரயில் பாதை இல்லாததால், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க முடியாத நிலை இருந்தது. இதற்கிடையே, ரூ.256 கோடியில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே சுமார் 30 கிமீ தொலைவுக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் முழுவதும் முடிந்து, ரயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது புதிய பாதையில் முதல் முறையாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதனால், விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்படுவது குறையும்.

கூடுதல் ரயில்கள்

தாம்பரம்-செங்கல்பட்டு தடத்தில் தேவைக்கு ஏற்ப அலுவலக நேரங்களில் மின் ரயில்களை அதிகரித்து இயக்கப்படும். தாம்பரம் வரையில் இயக்கப்படும் மின் ரயில்களில் சுமார் 25 சதவீத ரயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 2 Comments )
  • K
    Kavitha

    From beach to chengalpet please run one lady special train at evening. It will help working wonens.

  • r
    r.sundaram

    மதுரை-நாகர்கோயில் ரைல்வேபாதை இரட்டிப்பு பனி எப்போதுதான் முடியுமோ தெரிய வில்லை.

 
x
News Hub
Icon