Published : 22 Apr 2016 10:10 AM
Last Updated : 22 Apr 2016 10:10 AM
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் முதன்முதலாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது.
இதேபோல் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், திமுக 9 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. அதே நேரத்தில் இக்கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் பிரச்சினை நிலவுகிறது. காங்கிரஸ் தரப்போ வேட்பாளர் பட்டியலை தயார் செய்து கட்சி தலைமைக்கு அளித்துள்ளது. ஆனால், இதுவரை வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. தொடர்ந்து அந்த கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வரு கின்றன. பாஜக தரப்பில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமக 30 தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
தொடர் ஆன்மிக பயணத்தில் இருந்த ரங்கசாமி, பவுர்ணமி நாளான நேற்று வேட் பாளர் பட்டியலை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவித்த வுடன் வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்து வெற்றி பெற்றனர். ஆனால், இம்முறை என்.ஆர்.காங்கிரஸில் இருந்து பலர் வெளியேறி அதிமுக, காங்கிரஸில் இணைந்துள்ளனர். குறிப்பாக ஆளுங்கட்சியில் எம்எல்ஏவாக இருந்த அங்காளன் காங்கிரஸில் இணைந் தார். வாரியத் தலைவராக இருந்த வையாபுரி மணிகண்டன், ஆட்சியமைக்க ஆதரவு தந்த சுயேச்சை எம்எல்ஏ வி.எம்.சி.சிவக்குமார் ஆகியோர் அதிமுகவில் இணைந்து வேட்பாளராகியுள்ளனர்.
ஆளுங்கட்சி வட்டாரங்களில் கூறும் போது, “என்.ஆர்.காங்கிரஸில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் மாற்றுக்கட்சியில் இணையக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வேட்பாளர் பட்டியலை ரங்கசாமி அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து பலர் வர வாய்ப்பு உள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT