Published : 01 Mar 2022 02:16 PM
Last Updated : 01 Mar 2022 02:16 PM

தாங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது: ஸ்டாலினுக்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி | கோப்புப் படம்

சென்னை: "தாங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். அவர் தனது 69-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, தாங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சியாக அளிப்பதாகக் கூறி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ அவர் வாழ்த்தினார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x