Published : 26 Feb 2022 01:33 PM
Last Updated : 26 Feb 2022 01:33 PM
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளுக்கான படைப்புகளை வரும் மார்ச் 15-க்குள்அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:‘எனது வாக்கு எனது எதிர்காலம் -ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுஆன்லைன் மூலம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டின் தேர்தல் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை அளவிடும்வகையில் விநாடி வினா போட்டிநடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவருக் கும் மின்னணு சான்று வழங்கப்படும். பிறரை ஊக்கப்படுத்தும் வகையிலும் அனைவரையும் கவரக்கூடிய வகையிலும் வாசகத்தை அமைக்கும் போட்டியில் பங்கு பெறுலாம். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல்பரிசாக ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம், மூன்றாம்பரிசாக ரூ.7,500, சிறப்பு பரிசாக 5பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
பாட்டுப்போட்டியில் பாரம்பரியஇசைப் பாடல்கள், தற்கால பாடல்கள், ராப் போன்ற ஏதோவொரு வடிவத்தில் புதிய பாடல்களை உருவாக்கி போட்டியில் கலந்து கொள்ளலாம். பற்கேற்பவர்களும் பாடகர்களும் தங்கள் விருப்பப்படி எந்தவொரு இசைக்கருவியையும் பயன்படுத்தலாம். பாடலின் கால அளவு மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். காணொலிபாடல் மற்றும் வாசகம் எழுதும்போட்டிகளுக்கான பதிவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிக ளில், ஏதாவது ஒன்றில் இருக்கலாம்.
காணொலிக் காட்சி தயாரிக்கும் போட்டியில் நேர்மையாக வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்கின் வலிமை குறித்து போட்டியாளர்கள் காணொலிக் காட்சி ஒன்றைஉருவாக்க வேண்டும். அந்தக் காணொலிக் காட்சியானது ஒருநிமிட கால அளவில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்கள், சிறப்பிடம் பெறுவோருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்பவர்கள் போட்டிகளின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும்நிபந்தனைகளை https://voterawarenesscontest.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளையும், பங்கேற்பாளர் களின் விவரங்களுடன் இணைத்து வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற மின்னஞ் சல் முகவரிக்கு அனுப்பவேண்டும். இந்த போட்டிகளில் பள்ளி, கல்லூரிமாணவர்கள், அனைத்து வயதுபொதுமக்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...