Published : 24 Feb 2022 05:48 PM
Last Updated : 24 Feb 2022 05:48 PM

”உக்ரைனில் படிக்கும் மகளை தொடர்புகொள்ள முடியவில்லை... அரசு உதவ வேண்டும்” - கொடைக்கானலில் பெற்றோர் தவிப்பு 

உக்ரைனில் மருத்துவம் படிக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த மாணவி அனுசுயா

கொடைக்கானல்: ”உக்ரைனில் மருத்துவம் படித்துவரும் எனது மகள் உள்ளிட்ட அனைவரையும் மத்திய, மாநில அரசுகள் மீட்டு இந்தியா அழைத்து வரவேண்டும்" என்று கொடைக்கானலைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் மகள் அனுசுயா. இவர், உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். உக்ரைன் - ரஷ்யா இடையே போர் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமல் அனுசுயா உள்ளிட்ட 6,000-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள கொடைக்கானலைச் சேர்ந்த மாணவியின் சகோதரி சிந்தியா கூறியது: "எனது சகோதரி உக்ரைனில் மருத்துவம் இறுதியாண்டு படித்துவருகிறார். போர்ப் பதற்றம் காரணமாக என் சகோதரியால் அங்கு இருக்க முடியவில்லை. தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டது. உணவுக்கான மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அங்கு வாங்க முடியவில்லை. இந்தியாவில் இருந்து சென்ற விமானங்களும் ரத்தாகிவிட்டன. எனது சகோதரியை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. இதனால் அச்சமாக உள்ளது" என்றார்.

உக்ரைனில் உள்ள மாணவி அனுசுயாவின் தந்தை ராஜ்மோகன் கூறியது: "உக்ரைனில் எந்தநேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர். தொலைதொடர்பு துண்டிப்பால் எனது மகளுடன் பேச முடியவில்லை. உணவு கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. ஒரு பய உணர்ச்சியோடு அங்கு தவிக்கும் எனது மகளும், மற்ற இந்திய மாணவர்களும் உள்ளனர். நாங்களும் அச்சத்தில் இருக்கிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x