Published : 24 Feb 2022 08:10 AM
Last Updated : 24 Feb 2022 08:10 AM
கிருஷ்ணகிரி: தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர்பரப்பளவில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி,ஓசூர், தேன்கனிக்கோட்டை,கெலமங்கலம், ராயக்கோட்டை மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள், ராயக்கோட்டை தக்காளி சந்தை, ஓசூர், கிருஷ்ணகிரி சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆந்திரா,கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனையாகிறது.
குறிப்பாக, ராயக்கோட்டை தக்காளி மண்டியில் இருந்து நாள்தோறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிரேடு தக்காளி ஏற்றுமதியாகிறது. ஒரு கிரேடு25 முதல் 30 கிலோ கொண்டதாகும். கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, கிலோரூ.100-க்கு கடந்தது. தக்காளிவிளைச்சல் அதிகரிப்பால், சந்தைக்கு வரத்து அதிகரித்துவிலை வீழ்ச்சியடைந்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துஉள்ளனர்.
இதுதொடர்பாக ராயக்கோட்டை பகுதி விவசாயிகள் கூறும்போது, 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைச்சல் பாதித்தும், செடிகள் அழுகிவிட்டதால் தக்காளி கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையானது. இதனால் வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
இந்நிலையில் உள்ளூரிலும், திண்டுக்கல், கிணத்துகடவு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து, தக்காளி விலைசரியத் தொடங்கியது. தற்போது தரத்துக்கு ஏற்பகிலோ ரூ.5 முதல் ரூ.7 வரைவிற்பனையாகிறது. போதிய விலை கிடைக்காததால், வேதனையடைந்த விவசாயிகள் அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விடும் நிலைக்குதள்ளப்பட்டுள்ள னர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT