Published : 22 Feb 2022 07:17 PM
Last Updated : 22 Feb 2022 07:17 PM

நகராட்சியில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம்: ஒரு விரைவுப் பார்வை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நகராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுகவின் வெற்றி சதவீதம் 61.41 ஆக உள்ளது.

மொத்தம் 3,843 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 18 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3,842 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 2,360 திமுக வேட்பாளர்களும், 638 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 151 பேரும், பாஜகவைச் சேர்ந்த 56 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 19 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 41 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர தேமுதிகவைச் சேர்ந்த 12 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த முடிவுகளின்படி, கட்சி வாரியாக நகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக - 61.41 சதவீதம், அதிமுக - 16.60 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் - 3.93%, பாஜக 1.46 சதவீதம், சிபிஐ (எம்) - 1.07%, சிபிஐ - 0.49% மற்றும் தேமுதிக - 0.31%.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x