Published : 22 Feb 2022 06:01 PM
Last Updated : 22 Feb 2022 06:01 PM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் ஆகிய 4 நகராட்களில் உள்ள 108 வார்டுகளுக்கும், அதிகரட்டி, பிக்கட்டி, தேவர்சோலை, உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கீழ்குந்தா, கோத்தகிரி, நடுவட்டம், ஓவேலி மற்றம் சோலூர் ஆகிய 11 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், பிக்கட்டி, அதிகரட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் 3 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
இதனால், 291 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 1253 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதற்காக மாவட்டத்தில் 13 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் தொடங்கின. மதியம் 3 மணியளவில் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.உதகை ரெக்ஸ் பள்ளியில் உதகை நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கையை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆய்வு செய்தார்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக கூட்டணி முன்னிலை வகித்தது.
4 நகராட்சிகளில் உள்ள 108 வார்டுகளில் திமுக 66, அதிமுக 16, மா.கம்யூ, 3, காங்கிரஸ் 12, முஸ்லிம் லிக், விசிக தலா 1 மற்றும் சுயேச்சைகள் 9 வார்டுகளில் வெற்றி பெற்றன.
உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் திமுக 20 வார்டுகளையும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் திமுக 22 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றன.
கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் அதிமுக 1, மா கம்யூ 1, திமுக 11, காங்கிரஸ் 3, முஸ்லீம் லீக் 1 மற்றும் சுயேச்சைகள் 4 வார்டுகளில் வெற்றி பெற்றன. நெல்லியாளம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் அதிமுக 2, மா.கம்யூ 2, திமுக 13, காங்கிரஸ் 2, விசிக 1, சுயேச்சை 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் உள்ள 183 வார்டுகளில் திமுக 105, அதிமுக 26, பாஜக 5, மா.கம்யூ 3, காங்கிரஸ் 16, முஸ்லீம் லீக் 2, விசிக 2, சுயேச்சைகள் 24 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. அதிகரட்டியில் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 3, பாஜக 1, திமுக 10, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 3 வெற்றி பெற்றுள்ளன. உலிக்கல்லில் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 1, திமுக 13, விசிக 1, சுயேச்சைகள் 3 வெற்றி பெற்றனர். கீழ்குந்தாவில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 1, பாஜக 1, திமுக 8, காங்கிரஸ் 3, சுயேச்சைகள் 2 வெற்றி பெற்றன.
கேத்தி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 6, திமுக 8, காங்கிரஸ் 1 மற்றும் சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர். கோத்தகிரியில் உள்ள 21 வார்டுகளில் அதிமுக 4, பாஜக 1, திமுக 14 மற்றும் சுயேச்சைகள் 2 வெற்றி பெற்றன.
தேவர்சோலையில் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 1, மா.கம்யூ 2, திமுக 7, காங்கிரஸ் 3 முஸ்லீம் லீக் 2, சுயேச்சைகள் 3 வெற்றி பெற்றனர். நடுவட்டத்தில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 4, திமுக 8, சுயேச்சைகள் 3 வெற்றி பெற்றன.
பிக்கட்டியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 1, பாஜக 2, திமுக 8, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 2 வெற்றி பெற்றன. ஜெகதளா பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 5, திமுக 9, காங்கிரஸ் 1 வார்டுகளில் வெற்றி பெற்றன.
ஓவேலி பேரூராட்சியில் உள்ள 18 மா.கம்யூ., 1, திமுக 11, காங்கிரஸ் 4, விசிக 1, சுயேச்சை 1 வார்டுகளில் வெற்றி பெற்றன. சோலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 9, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 5 வெற்றி பெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT