Published : 22 Feb 2022 01:36 PM
Last Updated : 22 Feb 2022 01:36 PM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் 14 வார்டுகள் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளை கைப்பற்றிய திமுக வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் முடிவு அறிவிக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்ட 14 வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில், 51-வது வார்டில் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த எம்.விஜயலட்சுமி போட்டியின்றி வெற்றி பெற்றார். தேர்தல் நடந்த 59 வார்டுகளில், 10 வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், ஜமுனா ராணி (1-வது வார்டு), கவுசல்யா (5-வது வார்டு), ஆதி ஸ்ரீதர் (8வது வார்டு), வினோத்குமார் (12வது வார்டு), சுப்பிரமணியம் (18வது வார்டு), மணிகண்டன் ராஜா (19வது வார்டு), மோகன்குமார் (20வது வார்டு), ரேவதி திருநாவுக்கரசு (34வது வார்டு), கீதாஞ்சலி (39-வது வார்டு), சாந்தி பாலாஜி (52வது வார்டு) வெற்றி பெற்றுள்ளனர். கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவஞானம் (48வது வார்டு), காங்கிரஸ் வேட்பாளர்கள் மகேஷ்வரி(38), சபுராமா ஜாபர்சாதிக் (43 வது வார்டு), கொமதேக வேட்பாளர் குமாரவேல் (10வது வார்டு) வெற்றி பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளை கைப்பற்றிய திமுக:
ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது இதில், 10 பேரூராட்சிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக கூட்டணி 8 பேரூராட்சிகளையும், அதிமுக ஒரு பேரூராட்சியையும் கைப்பற்றியுள்ளன. அதன் முழு விபரம்:
1) அறச்சலூர் பேரூராட்சி: 15 வார்டுகளில் தி.மு.க. 11 வார்டுகளில் வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது.
2) நம்பியூர் பேரூராட்சி: 15 வார்டுகளில் 9 வார்டுகளை திமுகவும், 3 வார்டுகளை காங்கிரசும் கைப்பற்றின. இங்கு அதிமுக 2, பாஜக 1 இடத்தையும் பிடித்தன.
3) பாசூர் பேரூராட்சி: 12 வார்டுகளில் 8 வார்டுகளை திமுகவும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்தன.
4) பெரிய கொடிவேரி பேரூராட்சி: 15 வார்டுகளில் திமுக 12 வார்டுகளையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்தன. அதிமுக 2 வார்டுகளை பிடித்தது.
5) பவானிசாகர் பேரூராட்சி: 15 வார்டுகளில் திமுக 13, இந்திய கம்யூனிஸ்டு ஒரு வார்டையும் சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றின.
6) கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி: 18 வார்டுகளில் திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 4 வார்டுகளையும், சுயேச்சை 3 வார்டுகளையும் பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றின.
7) பெருந்துறை பேரூராட்சி: 15 வார்டுகளில் திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு இடத்தையும், அதிமுக 4 வார்டுகளையும் பிடித்தன.
8) அந்தியூர் பேரூராட்சி: 18 வார்டுகளில் திமுக 13 இடங்களை பிடித்தது. அதிமுக 2 வார்டுகளையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு இடம் மற்றும் ஒரு இடத்தை சுயேச்சையும் கைப்பற்றின.
9) ஊஞ்சலூர் பேரூராட்சி: 12 வார்டுகளில் 6 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளதால் அங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது.
10) அதிமுகவைப் பொருத்தவரை, லக்கம்பட்டி பேரூராட்சியில் 12 இடங்களைப் பெற்றுள்ளது. இங்கு திமுக 3 இடங்களையும் பிடித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT