Published : 22 Feb 2022 11:30 AM
Last Updated : 22 Feb 2022 11:30 AM

கோவில்பட்டி நகராட்சி திமுக கூட்டணி 9 வார்டுகளில் வெற்றி பெற்று முன்னிலை

கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சியில் நடந்த முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்று
முன்னிலையில் உள்ளது.

கோவில்பட்டி நகராட்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், 36 வார்டுகள் கொண்ட கோவில்பட்டி நகராட்சியில் மொத்தம் 85 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் பதிவாகியிருந்த வாக்குகள் என்பதற்காக 12 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணி 3 சுற்றுகளாக நடக்கின்றன.

முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டன. இதில் மொத்தம் 140 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

எண்ணப்பட்ட 1 முதல் 12-ம் வார்டுகளுக்கான வாக்குகளில் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் பெ.கனகலட்சுமி 1249 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் திமுக வேட்பாளர் ச.செண்பகவல்லி 649 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டில் அமமுக வேட்பாளர் மு.கருப்பசாமி 437 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் திமுக வேட்பாளர் கு.சித்ரா 756 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

5-வது சுயேச்சை வேட்பாளர் ரா.லவராஜா 1127 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 6-வது வார்டில் வேட்பாளர் முத்துராஜ் 765 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 7-வது வார்டில் திமுக வேட்பாளர் அ.சண்முகவேல் 565 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 8-வது வார்டில் திமுக வேட்பாளர் சுரேஷ் 520 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 9-வது வார்டில் திமுக வேட்பாளர் சை. மகபூப் ஜெரினா 746 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 10-வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் க.முத்துலட்சுமி 319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 11-வது வார்டில் மதிமுக வேட்பாளர் சீ.ரமேஷ் 845 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 12-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ப.உமா மகேஸ்வரி 708 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வாக்குகள் எண்ணப்பட்ட 12 வார்டுகளில் 6 இடங்களில் திமுகவும், மார்க்சிஸ்ட் இரண்டு இடங்களிலும், மதிமுக, அதிமுக, அமமுக, சுயேச்சை ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் திமுக கூட்டணி 9 இடங்களில் முன்னணியில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x