Published : 21 Feb 2022 05:36 PM
Last Updated : 21 Feb 2022 05:36 PM
கோவை: கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் 10-வது ஆண்டாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி கோவையில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத் கூறியது: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குறிப்பிட்ட இடத்தை சுற்றியுள்ள பறவைகளை கணக்கெடுக்க வேண்டும். அதன்பின், https://ebird.org/home என்ற இணையதளத்தில்அன்றைய தினம் இரவு 7 மணிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதோடு, neasacon@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குழு புகைப்படம், தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும். குழுவாக 3 முதல் 4 பேர் இணைந்து இதில் பங்கேற்கலாம். இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் bit.ly/saconbirdrace2022 என்ற இணைப்பில் வரும் 26-ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். கணக்கெடுப்பில் பங்கேற்கும் குழுவின் தலைவராக செயல்படுபவர், தாங்கள் கணக்கெடுக்கும் பகுதியின் இருப்பிடத்தை வாட்ஸ்அப்-ல் பதிவு செய்ய வேண்டும்.
கணக்கெடுப்பு தினத்தன்று இரவு 7 மணிக்கு ஜூம் செயலி வழியாக பங்கேற்பார்கள் கூட்டம் நடைபெறும். அதில் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம். சிறப்பாக செயல்படும் குழுவினருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள், தகவல்களுக்கு 7708797346 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT