Published : 21 Feb 2022 06:52 AM
Last Updated : 21 Feb 2022 06:52 AM

வெளியூர்களில் தொழில் செய்பவர்கள் வராததால் சரிவு- பள்ளப்பட்டி நகராட்சி முதல் தேர்தலில் குறைந்தளவு பதிவான வாக்குகள்

கரூர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியின் முதல் தேர்தலில் 51.16 சதவீதம் என மிகக்குறைந்த சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி, பேரூராட்சியாக இருந்து அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

கரூர் மக்களவை, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தல்களில் பள்ளப்பட்டி வாக்குகள் மிக முக்கிய இடத்தை வகிக்கும். சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி யாக பள்ளப்பட்டி உள்ளது. இத னால், பள்ளப்பட்டியில் வாக்குப் பதிவு சதவீதமும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், பள்ளப்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் தேர்தலில் பள்ளப்பட்டி நகராட்சியில் 15,373 ஆண்கள், 16,193 பெண்கள், 1 இதரர் என மொத்தமுள்ள 31,567 வாக்காளர்களில் 16,149 பேர் மட்டும் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 51.16. இதில், 6,570 ஆண்கள் 9,579 பெண்கள் என குறைந்த அளவி லேயே வாக்களித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவரிடம் கேட்டபோது, பள்ளப்பட்டியைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் கள் வெளியூர்களில் தொழில் செய்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. மேலும், பள்ளப் பட்டி நகராட்சியில் வேட்பாளர் களிடையே கடுமையான போட்டி இல்லாததாலும் வாக்குப் பதிவு சதவீதம் கடுமையாக சரிந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x