Published : 20 Feb 2022 04:30 PM
Last Updated : 20 Feb 2022 04:30 PM
சென்னை: பிப் 21ம் தேதி திங்கள் கிழமை நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
"நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு 21.02.2022 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சி வார்டு எண் 51, வாக்குச்சாவடி எண். 1174 AV வண்ணாரப்பேட்டை, வார்டு எண் 179, வாக்குச்சாவடி எண் 5059 AV ஓடைக்குப்பம், பெசன்ட் நகர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி வார்டு எண். 17, வாக்குச்சாவடி எண். 17W
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண். 16 வாக்குச்சாவடி எண். 16 M மற்றும் 16W
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண். 25 வாக்குச்சாவடி எண், 57 M மற்றும் 57 W
குறிப்பிட்டுள்ள 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு 21.02.2022 திங்கட்கிழமை அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம், அதாவது, மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட்-19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது."
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT