Last Updated : 08 Apr, 2016 10:56 AM

 

Published : 08 Apr 2016 10:56 AM
Last Updated : 08 Apr 2016 10:56 AM

15 அம்ச செயல்திட்டத்துடன் 2 கோடி துண்டுப்பிரசுரங்கள்: தமிழகம் முழுவதும் பாமக விநியோகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. 82 சதவீத இளைஞர்கள் ஆதரவு பாமகவுக்கு இருப்பதாக தெரிய வந்திருப்பதால் இளைஞர்கள், இளம் பெண்களின் ஆதரவை வாக்குகளாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, பாமகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கும் வண்ண துண்டுப்பிரசுரத்தை கட்சித் தலைமை தயாரித்தது. அதில், அன்புமணி பற்றிய விவரங்களுடன் மதுவிலக்கு, ஊழல் இல்லா தமிழகம், லோக் ஆயுக்தா சட்டம், இலவச, தரமான கல்வி, இலவச, தரமான மருத்துவ வசதி, வேளாண்மையில் புரட்சி, தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பை உருவாக்குதல், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உறுதி உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சிக்கான 15 முக்கிய செயல்திட்டங்களும் துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பாமக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுமார் 2 கோடி வண்ணத் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துள்ளோம். அவற்றை கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் வீடு, வீடாக விநியோகிக்கிறோம். கல்லூரிகள், பள்ளிகள், பஸ் நிலையம், ரயில் நிலையம், மக்கள் அதிகம் கூடும் இதர இடங்களிலும் கொடுத்து வருகி றோம். அன்புமணி ராமதாஸின் செயல்திட்டங்களை இதுவரை ஒன்றரை கோடி வீடுகளுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளோம். சமூக வலைதளங்கள் மட்டு மல்லாமல் சாதாரண மக்களையும் எங்கள் கட்சியின் நோக்கம் சென்றடைய வேண்டும் என்ற இலக்கு துண்டுப்பிரசுரம் மூலம் நிறைவேறியிருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x