Published : 02 Apr 2016 03:40 PM
Last Updated : 02 Apr 2016 03:40 PM
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், கிராமப்புற விவசாயிகளின் கோரிக்கை பிரகடன தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை.
விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள் ளன. அந்த அறிக்கை விபரம்:
விவசாயிகள் கடனாளியா வதைத் தவிர்க்க, விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விளை பொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலைக்கு விற்க ஏதுவாக குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். அனைத்து கூட்டுறவு கடன்களையும் உடனடியாக ரத்து செய்து, புதிதாக வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும்.
தண்ணீர் பாதுகாப்பு
விவசாய தொழிலுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்க வேண்டியது அரசின் கடமை. தண்ணீரை பாதுகாக்க அணைகள், ஏரி, குளங்கள், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். தனியார் தொழிற்சாலைகளுக்கு தாராளமாக தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். தண்ணீர் விநியோகத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்.
கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தென்னை, பனை மரங்களை பாதுகாக்க வேண்டும். கருப்பட்டிக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நியாயவிலைக் கடைகள் மூலம் கருப்பட்டி விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும். மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். விவசாயத்துடன் தொடர்புடைய மீன்பிடிப்பு, நெசவு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன போன் றவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு ள்ளன.
மலிவான வாக்குறுதிகள்
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் எஸ். நயினார் குலசேகரன் கூறும்போது, ‘நாட்டில் 75 சதவீதத்துக்கு மேற்பட்ட கிராமப்புறங்களில் வாழும் மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். ஆனால், பொருளாதார வளர்ச்சியில் விவசாயிகள் மிகவும் பின்தங்கியுள்ளனர். தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் கட்சிகள் மலிவான வாக்குறுதிகளை கொடுக்கின்றன. ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை மறந்துவிடுகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கை களை ஏற்று செயல்படுத்த முன்வரும் நேர்மையான அரசியல் கட்சிகளின் வேட்பாளருக்கே கிராமப்புற மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய் வோம். தேர்தல் முடிந்தவுடன் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராடுவோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT