Published : 19 Feb 2022 05:17 PM
Last Updated : 19 Feb 2022 05:17 PM
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 3 மணி வரை 47.18% வாக்குகள் பதிவாகின.
தலைநகர் சென்னையில் காலை 9 மணிக்கு வெறும் 3.96%, மதியம் 1 மணியளவில் 23.42% மட்டுமே வாக்குப்பதிவான நிலையில், 3 மணி அளவில் 31.89% வாக்குகள் பதிவானது. தொடர்ந்து மிகக் குறைந்தளவிலேயே பட்டியலில் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரியில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில் 64.19 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
21 மாநகராட்சிகளில் கரூர் மாநகராட்சியில் அதிகபட்சமாக 60.28% வாக்குப்பதிவாகியுள்ளது. இந்தப் பட்டியலிலும் சென்னை 31.89% வாக்குகள் பதிவான நிலையில் கடைசி இடம் பிடித்துள்ளது. மொத்தமாக 21 மாநகராட்சிகளில் 3 மணி நிலவரப்படி 39.13% வாக்குகள் பதிவாகின. இதேபோல் நகராட்சிகளில் 53.49% வாக்குகளும், பேரூராட்சிகளில் 61.38% வாக்குகளும் பதிவாகியுள்ளன. நகர்ப்புறங்களை காட்டிலும் பேரூராட்சி பகுதிகளில் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதற்கு இந்த எண்களே சாட்சியாக அமைந்துள்ளன.
மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT