Published : 19 Feb 2022 04:03 PM
Last Updated : 19 Feb 2022 04:03 PM
அரியலூர்: அரியலூரில் வாக்களித்து விட்டு வெளியே வந்த முதியவர் வளாகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகள் மற்றும் உடையார்பாளையம், வரதராஜன் பேட்டை பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மதியம் 3 மணி வரை அரியலூர் மாவட்டத்தில் 62.34 சதவீத வாக்குகள் பதிவாயின. இதனிடையே அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆண்களுக்கான வாக்குப் பதிவு இயந்திரம் மதியம் பழுதானதால் சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.
பின்னர் பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், 18-வது வார்டை சேர்ந்த கலியபெருமாள் (72) நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்து விட்டு வெளியே வந்த நிலையில், மயக்கமடைந்து வளாகத்தில் கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சக்கர நாற்காலி உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT