Published : 01 Apr 2014 10:03 AM
Last Updated : 01 Apr 2014 10:03 AM

தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர்: தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி

தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப் படுவர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஓட்டுக்காக பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதை வலியுறுத்தும் வகையில் 6 விளம்பரப் படங்களை வெளி யிட்டிருக்கிறோம்.

அவை தற்போது தூர்தர்ஷன், அரசு தொலைக்காட்சி, யூ-டியூப்களில் ஒளிபரப்பாகிறது. திரையரங்கு களில் ஒளிபரப்ப அனுமதி கோரி, தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்ததும் திரைய ரங்குகளில் ஒளி பரப்பாகும்.

ரூ.70 லட்சம் செலவு

தேர்தலுக்காக ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். நன்கொடை கோரி மற்றவர்களுக்கு செல் போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பினால், அதற்கான செலவுத் தொகை வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

தேர்தலுக்காக வெளி நாடுகளில் இருந்து கப்பலில் பணம் கடத்தப்படுகிறதா என்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த 3 கப்பல்களில் சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் ஒன்றும் இல்லை என தெரியவந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் அனைவ ரின் கார்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும். அந்த அடிப்படையில்தான் வைகோ காரை சோதனை செய்திருப்பார் கள். அதில் தவறில்லை.

மதுக்கடைகள் மூடல்

தமிழகத்தில் 22-ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தலையொட்டி 48 மணி நேரத்துக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவிடப்படும். அதன்படி, 22-ம் தேதி மாலை 6 மணி முதல் 24-ம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இந்தத் தேர்தலில் 22-ம் தேதி காலை 10 மணி முதலே டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இதைச் செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் சமீபத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் டாஸ்மாக் கடைகளை முன்கூட்டியே மூடுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

3 கட்ட பயிற்சி

தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வாக்குப் பதிவு தொடர்பாக 3 கட்ட பயிற்சி அளிக்கப்படுகின்றன. முதல்கட்ட பயிற்சி முடிந்துள்ளது. 2-வது கட்ட பயிற்சி வரும் 5-ம் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி தேர்த லுக்கு முந்தைய நாளும் நடத் தப்படும். தேர்தல் பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாக்காளர்களைக் கொண்ட துணை வாக்காளர் பட்டியல், வரும் 7-ம் தேதி தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும். மொத்தம் 60,418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்ப டுகின்றன. வாக்குச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பிடம், தற்காலிக சாய்தள பாதை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஒரு தொகுதியில் 16 வேட்பாளர் களுக்கு மேல் போட்டியிட் டால் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத் தப்படும். தற்போது 1.25 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் தயாராக உள்ளன.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

‘நோட்டா’வுக்கு ஓட்டு!

‘‘கடந்த தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போடாமல் ‘49 ஓ’ படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தேன். இப்போது எனது பெயர், வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்றுகூட இன்னும் பார்க்கவில்லை. இந்தத் தேர்தலில் நான் ஓட்டுப் போட ‘நோட்டா’ பட்டன் இருக்கிறதே. ஒருசார்பற்றவன் என்பதாலேயே இப்படி வாக்களிக்கிறேன்’’ என்றார் பிரவீண்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x