Published : 30 Apr 2016 02:52 PM
Last Updated : 30 Apr 2016 02:52 PM
திமுக தலைவர் மு. கருணாநிதி நீண்ட இடைவெளிக்குப்பிறகு பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் வரும் மே 2-ம் தேதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் கருணாநிதி வரும் மே 2-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார்.
அன்று காலை ரயிலில் வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க நெல்லை திமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அங்கிருந்து தாழையூத்து இந்தியா சிமென்ட்ஸ் விருந்தினர் மாளிகையில் சென்று தங்கும் அவர், பிற்பகலில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், புதிய தமிழகம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து அவர் பேசுகிறார். இதற்காக மார்க்கெட் திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்படவுள்ளது.
பாளையங்கோட்டை பிரச்சாரக் கூட்டத்துக்குப் பின், அங்கிருந்து வேன்மூலம் ஆலங்குளம், சங்கரன் கோவில் பகுதிகளில் கருணாநிதி பிரச்சாரம் செய்கிறார். அன்று இரவு 9 மணிக்கு ராஜபாளையத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பின்..
திருநெல்வேலி மாவட்ட திமுக மூத்த தலைவர் சுப. சீதாராமன் ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:
கடந்த 2006-ம் ஆண்டில் திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலின்போது அப்போதைய மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் ஏ.எல். சுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் களை அறிமுகம் செய்து வைத்தும், அவர்களுக்கு ஆதரவு கேட்டும் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் கருணாநிதி பேசியிருந்தார். அத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஏ.எல். சுப்பிரமணியன் மேயரானார். அதன்பின் தற்போதுதான் கருணாநிதி இத் திடலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசவுள்ளார். 2012-ல் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக் குப்பின் தென்மாவட்டத்துக்கு தற்போது கருணாநிதி வரவுள்ளது கட்சியினரை உற்சாகப்படுத் தியிருக்கிறது என்றார் அவர்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலின்போது மதுரை வரை வந்து அவர் பிரச்சாரம் செய்தி ருந்தார். உடல்நலனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி உள்ளிட்ட தென்பகுதிகளில் பிரச் சாரம் செய்ய வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT