Published : 30 Apr 2016 10:51 AM
Last Updated : 30 Apr 2016 10:51 AM
தமிழகத்தின் துவரம் பருப்பு தேவையை வட மாநிலங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. கடந்த ஆண்டு வட மாநிலங்களில் விளைச் சல் குறைவால், துவரம் பருப்பு கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது.
எனவே, துவரம் பருப்பின் உற் பத்தி மற்றும் தரத்தை அதிகரிக்க தமிழக வேளாண்துறை ஆணையர கம், பாபா அணு ஆராய்ச்சி மையத் தின் (பி.ஏ.ஆர்.சி) உதவியை நாடி யது.
பின்னர், டிடி-401 ரக துவரை விதைகளை தமிழக வேளாண் துறைக்கு வழங்கியது பாபா அணு ஆராய்ச்சி மையம்.
சோதனை அடிப்படையில் பெறப்பட்ட 15 கிலோ விதைகள், சேலம் மாவட்டத்தில் தென்னங்குடி பாளையம், முல்லைவாடி பகுதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டன. இந்தச் சோதனை முயற்சியில் எதிர்பார்த்தபடியே, குறுகிய நாள் களில், அதிக மகசூலை அளித்தது புதிய ரக துவரை.
இதுகுறித்து, சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் என்.இளங்கோ கூறும்போது, ‘‘சேலத் தில் பயிரிடப்படும் வம்பன் 2 மற்றும் லட்சுமி ஆகிய ரகங்கள் அறு வடைக்கு வர 180 நாள்களாகும். இந்த ரகங்களில், ஹெக்டேருக்கு சுமார் 1,500 கிலோ வரை மட்டுமே மகசூல் கிடைக்கும். ஆனால், 145 நாள்களில் அறுவடைக்கு தயாராகும் டிடி-401 ரக துவரை மூலம், ஹெக்டேருக்கு சுமார் 2,550 கிலோ வரை மகசூல் கிடைத் துள்ளது. இது, மற்ற ரகங்களை ஒப்பிடுகையில், ஹெக்டேருக்கு சராசரியாக 1,000 கிலோ கூடுதல் மகசூலாகும்.
சோதனை அடிப்படையில் 3 விவசாயிகளின் விதை உற்பத்தி பண்ணையில் பயிரிடப்பட்ட டிடி-401 ரகத்திலிருந்து 3.7 டன் ஆதார விதைகளை கொள்முதல் செய்துள்ளோம்.
நல்ல விளைச்சலை அளித்துள் ளதால், மற்ற மாவட்ட விவசாயி களுக்கும், விதை உற்பத்திக்காக இந்த விதைகளை அளிக்க வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.
புதிய ரக துவரை விதைகளை பயிரிட்ட சேலம் மாவட்டம், முல்லை வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர் கூறும்போது, ‘‘துவரை ரகங்களைப் பொறுத்தவரை பூச்சி தாக்கம், பயிரின் உயரம் ஆகியவை விளைச்சலுக்கு சவால்களாக உள்ளன. டிடி-401 ரக துவரை, பூச்சி தாக்கம் மற்றும் உயரம் குறைவானது.
உயரம் குறைவாக இருப்பதால் பராமரிக்க எளிதாக உள்ளது. புதிய ரகத்தால் கூடுதல் மகசூல் கிடைப்பதோடு, ஹெக்டேருக்கு சராசரியாக ரூ. 50,000 வரை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்” என்றார்.
பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி டேனியல் செல் லப்பா ‘தி இந்து’விடம் கூறும் போது, ‘‘புதிய ரக விதைகளை வெளியிடுவதற்கு விஞ்ஞானிகள் சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டியிருக்கும்.
டிடி-401 ரக துவரை விதைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி யவர் மும்பை, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி கே.எஸ்.ரெட்டியின் தலைமையின் கீழ் பணியாற்றும் தமிழக விஞ்ஞானி தனசேகர் ஆவார். 2007-ல் வெளியிடப்பட்ட இந்த துவரை ரகம் மகாராஷ்டிரம், மத் தியப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் நல்ல விளைச்சலை கொடுத் துள்ளது.
தற்போது இந்த புதிய ரகத்தின் பயன் தமிழகத்துக்கும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக் கிறது. இந்த ரகம், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும்” என்றார்.
வேளாண்மை, சுகாதாரத்தில் அணு ஆராய்ச்சி மையத்தின் பங்கு
பாபா அணு ஆராய்ச்சி மையம் அணுமின் உற்பத்தி மட்டுமின்றி சுகாதாரம், வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் அணுசக்தி மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வேளாண் ஆராய்ச்சியில் கதிரியக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வறட்சியை தாங்கும் திறனுடன், குறுகிய காலத்தில் அதிக மகசூலை அளிக்கும் 42 வகையான விதைகளை பி.ஏ.ஆர்.சி இதுவரை உருவாக்கியுள்ளது.
இதில், பெரும்பாலானவை விதைகள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளைச் சேர்ந்தவையாகும்.
மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடையவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் வேளாண் துறையில் பி.ஏ.ஆர்.சி தனது பங்களிப்பை செலுத்தி வருவதாக மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT