Published : 16 Feb 2022 10:38 AM
Last Updated : 16 Feb 2022 10:38 AM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன், பெண்களுக்கான பல புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க இருப்பதாக அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.
செஞ்சி பேரூராட்சியில் 7-வதுவார்டில் திமுக சார்பில் போட்டியி டும் வேட்பாளர் கே.எஸ்.என். மொக் தியார் அலியை ஆதரித்து, சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியது:
திமுக அரசு பொறுப்பேற்ற 9 மாதகாலங்களில், தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்,
நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் பெண்களுக்கு ஏராள மான திட்டங்களை அறிவிக்க உள்ளார்.
கரோனா காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணத்தொகையும், 14 வகை மளிகை தொகுப்புகளும், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவத் திட்டமும், கரோனா காலத்தில் இடைநிற்றல் கல்வியை போக்க தமிழகம் முழுவதும் இல்லம் தேடி கல்வித் திட்டத் தையும் கொண்டு வந்துள்ளார்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘இன்னுயிர் காப்போம் 24’ என்ற திட்டம், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவ தற்கு திண்டிவனத்தில் சிப்காட் தொழிற்சாலை ஆகியவை ஆட்சிபொறுப்பேற்ற 9 மாத காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட் டங்களை தந்து வரும் முதல்வர் தலைமையில் சிறப்பான நல்லாட்சி தொடர நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT