Published : 14 Feb 2022 12:05 PM
Last Updated : 14 Feb 2022 12:05 PM
‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதுபைத்தியக்காரத்தனம். அதை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது’’ என்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டசீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பதுஏற்புடையது அல்ல. மாற்று தேடும்மக்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பாக இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது மற்ற கட்சி வேட்பாளர்களை கடத்தவில்லை. திமுக ஆட்சியில் எங்கள் வேட்பாளர்கள் சிலரை போட்டியில் இருந்து விலகுமாறு மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர். பண பேரம் நடந்துள்ளது.
பைத்தியக்காரத்தனம்
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கல்வி என்பது பைத்தியக்காரத்தனம். அதை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது. வாக்கு இயந்திரத்தையும், வீதி வீதியாகச் சென்று பரப்புரை செய்வதையும் ஒழிக்க வேண்டும். ஒரே மேடையில் அனைவருக்கும் வாய்ப்பளித்து பேச வைக்க வேண்டும். நானும் தமிழன் என்று கூறி ராகுல் காந்தி தமிழர்கள் மீது பற்று இருப்பதுபோல் காட்டுகிறார். அவர்களுக்கு தமிழ் இனத்தின் மீது எந்த பற்றும் இல்லை.
கையேந்தி நிற்கக்கூடாது
ஜிஎஸ்டி நிலுவையை கேட்பதை விட ஜிஎஸ்டி வரி செலுத்த முடியாதுஎன்று கூற வேண்டும். எல்லாவற்றையும் தனியாருக்கு விற்றுவிட்டு எதற்கு வரி வசூல் செய்கிறார்கள்?. அவர்களிடம் வரியை கொடுத்துவிட்டு கையேந்தி நிற்கக் கூடாது.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் முறை நீண்ட காலமாக உள்ளது.பள்ளி, கல்லூரிக்கு மத அடையாளத்தோடு வரக்கூடாது என்றால்நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்குள் மத அடையாளத்தோடு வரலாமா?. வாக்களிக்க பணம்கொடுப்பதை பறக்கும்படை தடுக்க வில்லை. வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் யாரையாவது கைது செய்துள்ளார்களா?. பணம் கொடுத்தால் கைது செய்து,10 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.
நானும் தமிழன் என்று கூறி ராகுல் காந்தி தமிழர்கள் மீது பற்று இருப்பதுபோல் காட்டுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT