Published : 07 Apr 2016 11:43 AM
Last Updated : 07 Apr 2016 11:43 AM
முக்குலத்தோர் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்காமல் விட்டிருப்பது தென் மாவட்டங்களில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் நவமணி தெரிவித்தார்.
முக்குலத்தோர் கட்சிகளான பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவை இம்முறையும் அதிமுக கேட்காமலேயே அந்தக் கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தன. ஆனால், இந்தக் கட்சிகளில் யாருக்கும் தொகுதியை ஒதுக்கவில்லை அதிமுக. இருப்பினும் கடைசி நேரத்தில் மாறுதல் வரலாம் என எதிர்பார்ப்புடன் உள் ளன இந்தக் கட்சிகள்.
அதிமுக தலைமையின் இந்தப் போக்கு தென் மாவட்டங்களில் அந்தக் கட்சியின் வெற்றிக்குச் சவாலாய் இருக்கும் என்கிறார்கள் முக்குலத்தோர் கட்சித் தலை வர்கள். கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கார்த்திக் தலைமையில் இருந்த பார்வர்டு பிளாக் கட்சியை தொகுதி உடன்பாட்டிற்காக அழைத்தார் ஜெயலலிதா. அந்த நேரத்தில், பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. சந்தானம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத் திருந்தது கட்சித் தலைமை. ஆனால், அதிமுக விசு வாசியான சந்தானத்திற்காக பரிந்து பேசிய ஜெய லலிதா, அவரையும் அழைத்துக் கொண்டு வரும்படி பார்வர்டு பிளாக்கின் அகில இந்திய பொதுச் செய லாளர் பிஸ்வாஸிடம் தெரிவித்தார். இதை ஏற்காத பிஸ்வாஸ், கூட்டணியை முறித்தார்.
இதையடுத்து, 101 தொகுதிகளில் தனித்துப் போட்டி என அறிவித்தது பார்வர்டு பிளாக். கடைசியில் 60 தொகு திகளில் போட்டியிட்ட அக்கட்சி தென் மாவட்டங்களில் மூன்று தொகுதிகளில் நேரடியாகவும் இருபதிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் மறைமுக மாகவும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு வேட்டு வைத்தது.
இதுகுறித்துப் பேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் முன் னாள் மாநிலத் தலைவர் நவமணி, ’’முக்குலத்தோர் கட்சித் தலைவர்கள் மீது எங்கள் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதனால் தான் அந்தக் கட்சிக ளுக்கு இன்றைக்கு இப்படியொரு நிலை. தங்களது செல்வாக்கை மற்றவர்களுக்கு புரியவைக்கும் விதமாக ஒரு கூட்டு இயக்கத்தை கட்டி கள மிறங் கும் அளவுக்கு எங்கள் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை. என்றாலும், முக்குலத்தோர் அமைச்சர்களை சந்தேக வளையத்தில் நிறுத்தியது, முக்குலத்தோர் கட்சிகளை புறந்தள்ளியது இதெல்லாம் தெற்கே 7 மாவட்டங்களில் அதிமுக-வுக்கு சரிவை உண்டாக்கும்’’ என்றார்.
இது தொடர்பாக அதிமுக தரப்பில் பேசியவர்களோ, முக்குலத்தோர் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கவில்லை என்றாலும் தென் மாவட்டங்களில் மட்டுமே முக்கு லத்தோரில் 18 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறார் ஜெயலலிதா’’ என்கிறார்கள்.
இன்னும் சிலரோ, ’’சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் எதிர்மறை தீர்ப்பு வந்தால் அதற்கேற்ப கட்சியை கொண்டு செலுத்தும் வகையில் இம்முறை வேட்பாளர்களை தேர்வு நடந்திருக்கிறது. இதில் சசி கலாவின் ஆலோசனையும் கேட்கப்பட்டிருக்கிறது. சசி கலா பேரவையை தொடங்கியதால் நடவடிக்கைக்கு உள்ளான நீதிபதி உசிலம்பட்டி வேட்பாளராக அறிவிக் கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி’’ என்கிறார்கள்.
அதேசமயம், கடந்தமுறையும் இதே நீதிபதி தான் உசிலம்பட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தொகுதி பா.பி-க்கு ஒதுக்கப்பட்டது. அதே போல் இம்முறையும் மாறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT