Published : 03 Apr 2016 10:35 AM
Last Updated : 03 Apr 2016 10:35 AM
கோயில் மாநகர் என அழைக்கப் படும், மதுரையில் ஒவ்வொரு ஆண் டும் நடைபெறும் சித்திரைத் திரு விழா உலகப் பிரசித்திபெற்ற நிகழ் வாகும். மதுரை மீனாட்சி சுந்தரேசு வரர் கோயிலும், அழகர் கோயிலும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வு சைவமும், வைணவமும் ஒருங்கி ணைந்த பெருவிழாவாகக் கொண் டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சித்திரைத் திரு விழா, வருகிற 10-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 19-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 20-ம் தேதி சித்தி ரைத் திருவிழா தேரோட்டம் நடக் கிறது. ஏப்.22-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைப வம் நடைபெறுகிறது.
கள்ளழகர் வேடமணிந்து..
அப்போது, கள்ளழகர் வேட மணிந்த ஆயிரக்கணக்கான பக்தர் கள், அழகர் மீது நீரை பீய்ச்சி அடித்து மகிழ்வர். லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றிலும், அதன் கரையிலும் நின்று கள்ளழ கரை தரிசிப்பர். இந்த ஆண்டு வைகை ஆற்றில் தண்ணீர் இல்லா விட்டாலும், அழகர் ஆற்றில் இறங்கு வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. சித்திரைத் திருவிழாவில் அழகர் வேடம் பூண்டோர் அணியும் சல்லடம் ஆடைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபத்தில் தீவிரம் அடைந்துள்ளது.
இதுகுறித்து புதுமண்டபத்தில் அழகர் ஆடைகள் தயாரிக்கும் பால முருகன் என்பவர் கூறியதாவது:
விவசாயிகள் நேர்த்திக் கடன்
ஆரம்ப காலத்தில் விவசாயம் செழிக்க சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, விவசாயிகள் அழகர் வேட மணிந்து கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடிப்பதை நேர்த்திக்கடனாக செய்வார்கள்.
காலப்போக்கில் விவசாயம் அருகிவிட்டதால் தற்போது நகரவாசிகள், குடும்ப நலன், தொழில்வளம் பெருக நேர்த்திக் கடனாக விரதம் இருந்து, அழகர் வேடமணிந்து தண்ணீரை பீய்ச்சி யடிப்பது அதிகரித்துள்ளது.
குறிப்பாக பெற்றோர், குழந்தை களுக்கு அழகர் வேடமணிந்து, தண்ணீரை பீய்ச்சியடிக்க வைப்ப தில் ஆர்வம் காட்டுகின்றனர். அழ கர் வேடமணிவோர் அணியும் ஆடை யில் கருப்பு நிறம் இடம்பெறாது. இதற்காக, புது மண்டபத்தில் ஆயி ரக்கணக்கான அழகர் ஆடைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிகளவு பங்கேற்பதால் அழகர் வேடமணியும் ஆடைகளை வாங்க அதிகளவு ஆர்டர் கொடுத்து வரு கின்றனர். பலர், தைத்து வைத்த ஆடைகளை வாங்கிச் செல் கின்றனர்.
வரும் அமாவாசை தினத்தன்று அழகர் வேடமணியும் பக்தர்கள் விரதத்தை தொடங்குவர். அதன் பின், இந்த அழகர் ஆடை விற்பனை அதிகரிக்கும். இந்த ஆடை தயாரிக்க மும்பையில் இருந்து பிரத்யேகமாக சாட்டின் மற்றும் வெல்வெட் துணிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT