Published : 13 Feb 2022 11:53 AM
Last Updated : 13 Feb 2022 11:53 AM
காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, அண்ணாமலை நகர், புவனகிரி, கிள்ளை, பரங் கிப்பேட்டை, கெங்கைகொண்டான் ஆகிய பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டங்களில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது:
லால்பேட்டை பகுதி மக்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டவன். எனது தந்தை எம்.ஆர், கிருஷ் ணமூர்த்தி பஞ்சாயத்து தேர்தலில் நிற்கும் போது 156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றார்.
அதற்கு முழு காரணம் லால்பேட்டை பகுதி மக்களே. எம்ஆர்கே என்ற பெயர் நிலைத்து அதிலிருந்து நான் மாவட்ட செயலாளராக ஆகி, அமைச்சராகி உள்ளேன் என்றால் அதற்கு முழு காரணமும் லால்பேட்டை பகுதி மக்கள் தான்.
இம்மக்கள் எந்நேரமும் என்னை தொடர்பு கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் என்னை தொடர்பு கொள்வதே இல்லை.
பதவி இல்லாத காலத்தில்,என்னை சந்தித்து சில கோரிக் கைகளை வைத்தீர்கள். அவற்றை நான் நிறைவேற்றியுள்ளேன். தற் போது பதவியில் உள்ளேன். இல்லாத போதே நிறைவேற்றும் போது, பதவியில் இருக்கும் போது செய்ய மாட்டேனா! உங்கள்கோரிக்கை என்ன என்பதைதெரிவிக்குமாறு கேட்டுக்கொள் கிறேன். சிலர் தனியாக போட்டியிடுகின்றனர் அவற்றைப் பற்றியெல் லாம் நீங்கள் கவலைப்படாமல் நாம் வெற்றி பெற மிகத்தீவிரமாகவும் கடுமையாகவும் உழைக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் காட்டுமன்னார் கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல் வன், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment