Last Updated : 16 Apr, 2016 09:34 AM

 

Published : 16 Apr 2016 09:34 AM
Last Updated : 16 Apr 2016 09:34 AM

கண்ணகி கோயில் சாலையை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்: கேரள வனத்துறை தொடர்ந்து இடையூறு

கண்ணகி கோயிலுக்குச் செல்ல கேரள வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்வதை தவிர்க்க, பளியங்குடியில் இருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையை சீரமைக்கக் கோரி தமிழக பக்தர்கள் வலியு றுத்தி உள்ளனர்.

மங்கலதேவி கோயில் எனும் கண்ணகி கோயில் தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று ஒரு நாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு தமிழ கம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இதற்கிடையில் தமிழகத்துக்குச் சொந்தமான கண்ணகி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை பல ஆண்டுகளாக கேரள அரசு உரிமை கொண்டாடி வருகிறது. இக்கோயிலுக்குச் செல்லும் தமிழர் உரிமையை பறிப்பதற்காக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கோயிலுக்குள் புகுந்து கண் ணகி விக்கிரகத்தை சேதப்படுத்தி துர்க்கை சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

கடந்த 1982-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழாவுக்குச் சென்ற தமிழர்களை கேரள காவல் துறையினர் கைது செய்தனர். மத்திய அரசு தலையிட்டதன்பேரில் தமிழக, கேரள அதிகாரிகள் தற் போது வரை சித்திரா பவுர்ணமி திருவிழாவுக்கு முன்னர் கலந்து பேசி திருவிழாவினை நடத்தி வருகின்றனர். கண்ணகி கோயில் தங்கள் எல்லைக்குள் இருப்பதாகக் கூறி, கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழா வரும் 22-ம்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழக, கேரள அரசு உயர் அதிகாரிகள் கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கண்ணகி கோயில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 1934-ம் ஆண்டு மதுரை மாவட்ட அரசிதழில் கூடலூர் கிராமத்தினர் இக்கோயி லுக்குச் செல்ல 12 அடி அகல வழித்தடம் அமைக்கப்பட்டிருப் பது குறிப்பிடப்பட்டுள்ளது. 1959-ம் ஆண்டு தமிழக அரசு வரைபடங் களில் இப்பகுதி தமிழக எல்லைக் குள் உள்ளது. என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1975-ம் ஆண்டு தமிழக, கேரள நில அளவைத் துறையினர் நடத்திய கூட்டு சர்வேயில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழக எல்லையில் கண்ணகி கோயில் அமைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கேரள வனத்துறை யினர் பெரியார் புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட பகுதி யில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. அதனால் தங்க ளது அனுமதியின்றி பக்தர்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது என தடுத்து வருகின்றனர்.

வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோயிலுக்குச் செல்ல, தமிழக அரசு பளியங்குடியில் இருந்து கண்ணகி கோயிலுக் குச் செல்லும் மலைச் சாலையை சீரமைத்தால் மட்டுமே கேரள வனத்துறையினரின் தொல்லை இன்றி, தமிழக பக்தர்கள் நிம்மதி யாக நமது எல்லைக்குள் வாகனத்தில் சென்று வர முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x