Published : 29 Apr 2016 09:30 AM
Last Updated : 29 Apr 2016 09:30 AM
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை யோடு காத்திருந்த திமுக பிரபலங் களில் பலருக்கு கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இடமளித்து கவுரவித்து இருக்கிறது கட்சித் தலைமை.
கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் என வரிசைப்படுத்தி 40 பேர் கொண்ட கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித் திருக்கிறது திமுக. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்துக்கு சென்றுவர அனுமதிச் சீட்டு வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்.
இந்தப் பட்டியலில் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள், தேர் தலில் வாய்ப்பு கேட்டு விருப்ப மனு செய்திருந்தவர்கள். இவர் களுக்கு வாய்ப்பு அளிக்காத தலைமை, திமுக கூட்டணி வேட் பாளர்களின் வெற்றிக்காக தமி ழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய பணித்திருக்கிறது.
பர்கூரில் ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவனம், ‘யானை யின் காதுக்குள் புகுந்த எறும்பு’ என்று வர்ணிக்கப்பட்டவர். கிருஷ்ணகிரி மாவட்டச் செய லாளரான இவருக்கு இம்முறை தேர்தலில் வாய்ப்பு கிடைக்க வில்லை. இதேபோல திருச்செங் கோடு தொகுதிக்காக காத்திருந்த நாமக்கல் மாவட்டச் செய லாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திச் செல்வன், சேலம் வடக்கு தொகுதிக்கு மனு கொடுத்திருந்த மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோருக்கும் தொகுதிகள் கிடைக்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் நட்சத் திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடமளித்து கவுரவித்திருக்கிறது திமுக.
பொங்கலூர் பழனிச்சாமி, டி.எம்.செல்வகணபதி, ஏ.கே.எஸ். விஜயன், பொன்.முத்துராம லிங்கம், மதுரை குழந்தைவேலு, வேலுச்சாமி, விருதுநகர் வி.பி.ராஜன், கம்பம் செல்வேந்திரன், சபாபதி மோகன், டாக்டர் மஸ்தான் என தேர்தல் வாய்ப்புக்காக காத்திருந்த பலரும் நட்சத்திரப் பேச்சாளர்களாகி உள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய நட்சத்திரப் பேச்சாளர் ஒருவர் கூறியதாவது:
முன்பெல்லாம் திமுகவில் ஆட்சிமன்றக் குழு என்ற ஒரு வலுவான அமைப்பு இருந்தது. இந்தக் குழுதான் வேட்பாளர்களை தேர்வு செய்யும். கட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் உருவான பிறகு, அவர்களின் விருப்பப்படி வேட்பாளர்கள் திணிக்கப்பட்டனர். இதற்கு இடைஞ்சலாக இருக்கலாம் என்பதால் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சி மன்றக் குழுவை முடக்கிவிட்டனர். தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாத வருத்தம் எங்களுக்கு இருக்கத்தான் செய் கிறது. ஆனால், கட்சிக் கட்டுப்பாடு என்பதால் அதை வெளியில் சொல்லமுடியாமல் உள்வாங்கிக் கொள்கிறோம்.
அதிமுக ஒன்மேன் ரூல் கட்சி; அங்கே யாரும் எதுவும் பேச முடியாது. காங்கிரஸில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், திமுக அப்படி இல்லை. சுய கட்டுப்பாடுள்ள கட்சி என்பதால் எல்லா மனக் கசப்புகளையும் மறந்து எங்களைப் போன்றவர்கள் களத்துக்குப் போய்விடுவோம். யாருக்காகவும் எதற்காகவும் உண்மையான திமுகக்காரன் கட்சியை விட்டுத் தர மாட்டான் என்பது தலைமைக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT