Published : 27 Jun 2014 08:35 AM
Last Updated : 27 Jun 2014 08:35 AM
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்வி. சி-23 ராக்கெட் வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி இதற்காக 29-ம் தேதி சென்னை வருகிறார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வரும் 30-ம் தேதி பி.எஸ்.எல்வி. சி-23 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் 714 கிலோ எடையுள்ள ‘ஸ்பாட் -7’ மற்றும் ஜெர்மனியின் ஏஐஎஸ்ஏடி, கனடாவின் என்எல்எஸ் ரக செயற்கைக்கோள்கள் மற்றும் சிங்கப்பூரின் வெலோக்ஸ் செயற்கைக் கோள் ஆகிய வற்றை, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சுமந்து செல்கிறது. இந்த ராக்கெட்டை ஏவுவதற் கான இறுதிகட்ட ஆலோச னைகள் 27-ம் தேதி நடக் கிறது. இதையடுத்து, 28-ம் தேதி காலை 8.49க்கு ராக் கெட் ஏவுவதற்கான 49 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கு கிறது. 30-ம் தேதி காலை 9.49 மணிக்கு இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வுள்ளார். இதற்காக அவர் 29 -ம் தேதி பகல் 1 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரு கிறார். மாலை 3.30 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலை யம் வரும் அவர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப் பட்டு செல்கிறார். அன்று இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் தங்குகிறார். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மோடி சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
30-ம் தேதி (திங்கள்கிழமை) ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் நரேந்திர மோடி சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் சென்னை வரு வதை முன்னிட்டு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து போலீஸ் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரு கின்றனர். மேலும், விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை பாஜக மூத்த நிர்வாகிகள் உள்ளே சென்று வரவேற் கின்றனர். இதேபோல், வழிஅனுப்பும் நிகழ்ச்சியிலும் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT