Published : 11 Feb 2022 07:49 AM
Last Updated : 11 Feb 2022 07:49 AM
திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுகவின் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தரப்பினரும், முன்னாள் மேயர் வி.மருதராஜ் தரப்பினரும் இணைந்து ஆலோசித்து முடிவு எடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 47-ல் அதிமுக போட்டி யிடுகிறது. ஒரு வார்டு கூட்டணிக் கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
இங்கு 38 வார்டுகளில் திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. 9 வார்டுகளில் திமுக கூட்டணிக் கட்சிகளை அதிமுக எதிர்கொள்கிறது.
அதிமுகவில் மேயர், துணை மேயர் வேட்பாளர் யார் என்பதில் கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
முன்னாள் மேயர் மருதராஜின் மகளும் 11-வது வார்டு வேட்பாளருமான பொன்முத்து தான் மேயர் வேட்பாளர் என வி.மருதராஜ் தரப்பினர் தெரிவித்த நிலையில், தேர்தல் முடிந்த பின்பே மேயர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தரப்பினர் தெரிவித்து வந்தனர்.
இது திண்டுக்கல் அதிமுகவில் ஒற்றுமை இல்லாத நிலையை வெளிப்படுத்தியது. இதையடுத்து கட்சியினரிடையே இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் திண்டுக்கல் சி.சீனிவாசன், வி.மருத ராஜ் மற்றும் நிர்வாகிகள், 47 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நீண்ட விவாதத்துக்குப் பின்பு மேயர் வேட்பாளராக வி.மருதரா ஜின் மகள் பொன்முத்துவையும், துணை மேயர் வேட்பாளராக திண்டுக்கல் சி.சீனிவாசனின் மகன் ராஜ்மோகனையும் முன்னிறுத் துவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
அதிமுக வேட்பாளர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பி னரும் தற்போது ஒருமித்த கருத்துடன் தேர்தல் களத்தில் இறங்கிவாக்கு சேகரித்து வருகின்றனர்.இதனால் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT