Published : 11 Feb 2022 08:01 AM
Last Updated : 11 Feb 2022 08:01 AM

பாஜக மத உணர்வுகளை தூண்டி அரசியல் செய்கிறது: ரமேஷ் சென்னிதாலா குற்றச்சாட்டு

நாங்குநேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி.படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

பாஜக மதரீதியான உணர்வுகளை தூண்டி அரசியல் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் (தேர்தல்) ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாங்குநேரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற ரமேஷ் சென்னிதாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவின் ஐடியாலஜி தென்னிந்தியாவில் எடுபடாது. அக்கட்சி மக்கள் மத்தியில் மதரீதியான உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்து வருகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டுதான் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இவற்றின் விலை உயர்ந்துவிடும்.

உணவு, உடை, இருப்பிடம், தனிப்பட்ட வாழ்க்கை என்பவை மனிதனின் அடிப்படை உரிமை என அரசியலமைப்பு சட்டம் தெரிவிக் கிறது. ஆனால், கர்நாடகாவில் அரசியல் லாபத்துக்காக மாணவர் களிடையே உடை விஷயத்தில் பாஜக பிரச்சினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டே இதுபோன்ற நடவடிக்கைகளில் பாஜக இறங்கியுள்ளது. நாட்டில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்து பிராமணராக மாற்றி மிகப்பெரும் சமூக சீர்திருத்தத்தை ராமானுஜர் செய்திருந்தார். வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர். அவரது சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு எந்த தகுதியும் கிடையாது.

எந்தெந்த மாநிலங்கள் நீட் தேர்வை விரும்புகிறதோ அந்தந்த மாநிலங்களில் நீட் தேர்வை வைத்துக்கொள்ளலாம். விரும்பாத மாநிலங்களில் நீட் தேர்வை கைவிடலாம் என்று நீட் தேர்வு தொடர்பாக ராகுல்காந்தி மிக எளிமையான கருத்தை தெரிவித்திருந்தார். அதை பின்பற்ற வேண்டும்.

வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

வள்ளியூரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:

உள்ளாட்சி தேர்தலிலும் மதசார்பற்ற கூட்டணி தொடர, நல்ல தருணத்தை தமிழக முதல்வர் ஏற்படுத்தித் தந்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு நல்லாட்சி நடைபெற்று வருகிறது. கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கொண்டு வந்தார். நாடுமுழுவதும் உள்ள கிராமங்களில் ஏழை தாய்மார்கள் பிழைப்புக்கு வழிசெய்துள்ளார். கூட்டணி வெற்றிபெற அனைவரும் உழைக்கவேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பார்வையாளர்கள் ரமேஸ் சென்னிதலா,  வல்லபிரசாத், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குனேரி எம்.எல்.ஏ ரூபி ஆர்.மனோகரன், மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாநகர் மாவட்டl் தலைவர் கே. சங்கரபாண்டியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x