Published : 10 Feb 2022 06:09 AM
Last Updated : 10 Feb 2022 06:09 AM
சிவகங்கை மாவட்டம், கானாடு காத்தான் பேரூராட்சியில் அதி முக, பாஜக கூட்டணி வைத்து செயல்படுகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர் தலில் தமிழக அளவில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரிந்து தனித்து களம் காண்கிறது. திமுகவுடன் காங்கிரஸ் கூட் டணி வைத்திருந்தாலும் கானாடு காத்தான் பேரூராட்சியில் நிலை மை தலைகீழாக உள்ளது.
இங்கு அதிமுக- பாஜக கூட்ட ணியாகவும், திமுகவை எதிர்த்து காங்கிரஸும் போட்டியிடுகின்றன. சில வார்டுகளில் அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளும் வலிமையான சுயேச்சைகளை ஆதரிக்கின்றன.
இந்த பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. பேரூராட்சித் தலைவர் பதவி பொதுப்பிரிவினர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 8-வது வார்டில் மக்கள் எதிர்ப்பால் வேட்புமனுத் தாக்கல் செய்த ஒருவரும் வாபஸ் பெற்றார். இதனால், அந்த வார்டில் தேர்தல் நடக்கவில்லை.
மேலும் 1, 3, 9, 12-வது வார்டுகளில் திமுகவை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது. 2, 7-வது வார்டுகளில் திமுகவை எதிர்த்து பாஜக போட்டியிடுகிறது. 6, 10, 11-வது வார்டுகளில் திமுகவை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்களும், 5-வது வார்டில் காங்கிரஸை எதிர்த்து சுயேச்சை வேட்பாளரும் போட்டி யிடுகின்றனர்.
அதேபோல் 4-வது வார்டில் திமுகவை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இங்கு திமுக சார்பில் அன்புக்கரசி, காங்கிரஸ் சார்பில் தனபாக்கியம், பாஜக சார்பில் சுதா ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.
மாநில அளவில் ஒரு கூட்டணி என்றால், இங்கு வேறு விதமான கூட்டணி அமைந்துள்ளதால் மக்களிடம் எதைச் சொல்லி வாக்கு கேட்பது என வேட்பாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT