Published : 05 Apr 2016 10:20 AM
Last Updated : 05 Apr 2016 10:20 AM

50 ஆயிரம் ஆண்களில் ஒருவருக்கு பாலினப் பிரச்சினை: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பெண்ணாக மாறுவதிலும் சிக்கல்

50 ஆயிரம் ஆண்களில் ஒருவருக்கு பாலினப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என பெங்களூருவைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஆர்.சேகர் தெரிவித்தார்.

மதுரை அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை மருத்துவக் கல்லூரி டீன் எம்ஆர். வைரமுத்து ராஜு தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த, பெங்களூரு மருத்துவக் கல்லூரி முன்னாள் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவரும், மருத்துவ நிபுணருமான டி.ஆர். சேகர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சராசரியாக 50 ஆயிரம் ஆண் களில் ஒருவருக்கு பாலினப் பிரச்சி னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவர்கள் பிறவியில் ஆணாக இருப்பார்கள். ஆனால் மனது பெண்ணை போன்றும், உடல மைப்பு ஆணை போன்றும் இருக் கும். அதனால், இவர்களால் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்க முடியாமல் மன அழுத் தம் ஏற்பட்டு மன நோய் ஏற்படும். நிம்மதியாக இருக்க முடியாமல் குடும்பத்தினர், நண்பர்கள், உறவி னர்கள் ஒதுக்குவதால் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றனர். ஆண் களுக்கு இதுபோன்ற பாலினப் பிரச் சினை ஏற்படுவதற்கு, எந்தக்கார ணத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இயற்கை யாகவே இப் பிரச்சினை ஏற்படுகிறது.

இவர்களுக்கு மனநல ஆலோசனையும், விழிப்புணர்வும் தேவை. தற்போது இவர்களில் பெரும்பாலான ஆண்கள், பெண்ணாக மாற விரும்புகின்றனர். இவர்கள் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறுகின்றனர். இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் தற்போது பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிகளவு நடக்கத் தொடங்கி உள்ளன.

இந்த மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்வதிலும், சட்டரீதி யான சிக்கல்கள் உள்ளன. அதனால், இந்த மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். பெண்ணாக மாற விரும்பும் ஆண்களுக்கு, உண்மையாகவே அவர்களுக்கு பெண் உணர்வு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களை மனநல மருத்துவரைக் கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் அவர்களுக்கு பெண் உணர்வு இருக்கிறதா, பெண்ணாக மாற விரும்புவதால் அவர்களுக்கு நன்மை ஏற்படுமா? என சான்றளித்த பின்னரே, இந்த மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே, இந்த மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

பெண் உணர்வுள்ள இந்த ஆண்கள் பெண்ணாக மாற விரும்புவது தவறில்லை. இவர்கள் பெண்ணாக மாறுவதால் இவர்கள் படிப்பு, வாழ்க்கை முறைகளில் சில அடிப்படை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ்களில் ஆணாக இவர்கள் பதிவு செய்யப் பட்டு இருப்பார்கள். அறுவை சிகிச்சைக்குப் பின் அதிலும் மாற்ற செய்ய வேண்டும். அதனால், மத் திய, மாநில அரசுகள் இந்த நடைமுறை சிக்கல்களை எளிமைப்படுத்த வேண்டும்.

2 வயது முதல் 4 வயதுக்குள் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களே பாலினப் பிரச்சினைகளை தீர் மானிக்கின்றன. தற்போது பாலினக் குறைபாடுள்ளவர்கள் விஷயத்தில் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது. அரசும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அளிக்கத் தொடங்கிவிட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மதுரை மருத்துவக் கல்லூரி பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் டாக்டர் வீரசேகரன் உடன் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x