Published : 09 Feb 2022 12:12 PM
Last Updated : 09 Feb 2022 12:12 PM
தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று தஞ்சாவூரில் எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார்.
போராட்டத்தின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய அரசு ஆன்லைன் பதிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று 9 ஆம் தேதி ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கலந்து கொண்டு கைதாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT