Published : 10 Apr 2016 12:49 PM
Last Updated : 10 Apr 2016 12:49 PM
சமூகத்தின் வளர்ச்சி குறியீடு கல்வி. ஆனால் பொருளாதார, புறச் சூழல் களால் அடிப்படைக் கல்வி மறுக் கப்படும் குழந்தைகள் சிறு வயதி லேயே தொழிலாளர்களாக மாற்றப்படும் கொடுமை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றி, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியறிவு வழங்க வேண்டுமென அரசு வலி யுறுத்தி வருகிறது.
அரசின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கோவை யைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உணர்ச்சிபூர்வமான கற்பனை ஓவி யம் ஒன்றை உருவாக்கியுள்ளார். மக்களாலும், ஓவியப் பிரியர்களா லும் பெரிதும் பாராட்டப்பட்ட அந்த ஓவியம், தற்போது தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் விழிப்புணர்வு விளம்பர ஓவியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர்
கோவை தீத்திபாளையத்தைச் சேர்ந்தவர் ஆர்.கிருஷ்ணன். சிங்கா நல்லூர் அருகே உள்ள அரசு உதவி பெறும் ராஜலட்சுமி மில்ஸ் உயர் நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரிய ராக பணியாற்றி வருகிறார். சமூகப் பிரச்சினைகளை வித்தியாசமான கோணத்தில் தனது ஓவியத்தின் வழியே பிரதிபலிப்பதில் வல்லவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளர் விழிப்பு ணர்வு ஓவியங்களை வரைந்துள் ளார்.
இந்த ஓவியங்கள் குறித்து தகவலறிந்து கோவை மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்ட அலுவலர் கள் ஓவிய ஆசிரியர் கிருஷ் ணனை தொடர்புகொண்டு பேசியுள் ளனர். அதன் பிறகு குழந்தைத் தொழிலாளர்களையும், தொழி லாளர்களாக உள்ள குழந்தைகளின் கல்வி ஏக்கத்தையும் காட்சி மொழி யில் உணர்த்தும் வகையில் மென் மையான ஓவியத்தை வரைந்து கொடுத்துள்ளார். அது பிடித்துப் போக, உடனடியாக, துறை ரீதியான அனுமதி பெற்று அந்த ஓவியத்தையே விழிப்புணர்வு விளம்பரமாகவும் அச்சிட்டுள்ளனர்.
ஓவிய ஆசிரியர் ஆர்.கிருஷ் ணன் கூறும்போது, ‘‘சுமார் 8 ஓவியங் களை இந்த தலைப்பில் வரைந்து கொடுத்தேன். இறுதியாக இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் ஓவியத்தை தேர்வு செய்தனர். ஏக் கத்துடன் கண்ணீர் வடிக்கும் சிறுமி குழந்தைத் தொழிலாளியாகவும், பரிதாபமான பார்வையுடன் பள் ளிக்கு செல்லும் சிறுமியும் இருக் கும் ஓவியம் தேர்வாகி, அரசு விழிப்புணர்வுக்காக அச்சிடப்பட் டுள்ளது. மக்களுக்காக எனது ஓவி யம் பயன்படப்போவது, மிகப் பெரிய விருதுக்கு சமமானது. அவர்கள் கருத்தை கூறும்போதே, கற்பனை ஓவியமாக இதை வரைந்து முடித்தேன்’’ என்றார்.
வித்தியாசமான ஓவியங்கள்
கற்பனை ஓவியம் வரைவதில் மட்டுமல்ல, தண்ணீரில் மிதக்கும் ரங்கோலி ஓவியம், கொப்பரைத் தேங்காயைச் செதுக்கி வித்தியாச மான ஓவியங்களையும், சர்க்கரை மூலம் ஓவிய பொம்மைகள் உரு வாக்குவதிலும் இவர் கை தேர்ந் தவர். தனது வித்தியாசமான ஓவியத் திறனை பள்ளி மாணவர்களுக்கும் ஆர்வத்துடன் பயிற்றுவித்து வருகி றார்.
ஆசிரியரின் எண்ணத்தை..
கோவை மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்ட இயக்குநர் விஜய குமார் கூறும்போது, ‘‘சிறந்த பல ஓவியங்களை அவர் வரைந்து கொடுத்தார். அதில், இரு சிறுமிகள் கொண்ட ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. அதை தேர்வு செய்து, அரசின் விழிப்புணர்வு விளம்பரமாக அச்சிட்டுள்ளோம்.
வழக்கமாக இணையதளத் திலிருந்து எடுக்கப்படும் படங்கள், வாசகங்களை மட்டுமே விழிப்புணர்வு விளம்பரத் துக்கு பயன்படுத்துவோம். முதன் முறையாக, கல்வியின் அவசியம் உணர்ந்த ஒரு ஆசிரியரின் எண் ணத்தையே ஓவியமாகப் பெற்று, விழிப்புணர்வுக்கு பயன்படுத்து கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT