Published : 06 Feb 2022 05:11 PM
Last Updated : 06 Feb 2022 05:11 PM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம்

கோப்புப் படம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள, வேட்பாளர்களை அதரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

இது குறித்து அதிமுக அலுலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

"நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 7.2.2022 முதல் 15.2.2022 வரை மேற்கொள்ள இருக்கும் சுற்றுப் பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பிப்7ம் தேதி நாளை காலை 8.30 மணி அளவில் சிவகாசி மாநகராட்சியில், காலை 11.00 மணி அளவில் நெல்லை மாநகராட்சியில், நண்பகல் 12.00 மணி அளவில் தூத்துக்குடி மாநகராட்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள வுள்ளார்.

பிப் 8ம் தேதி நண்பகல் 12 மணி அளவில் வைத்தியநாதன் மேம்பாலம் (தண்டையார்பேட்டை), மதியம் 1 மணி அளவில் தர்ம பிரகாஷ் திருமண மண்டபம் (எழும்பூர்), பிற்பகல் 3 மணி அளவில் விருகம்பாக்கம் மற்றும் மாலை 5 மணி அளவில் வேளச்சேரியில் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

பிப் 9ம் தேதி தாம்பரம், ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபம் (ஆவடி), காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாநகராட்சிகளிலும்,
பிப் 11ம் தேதி மதுரை, திண்டுக்கல், கரூர் மாநகராட்சிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இதேபோல் பிப் 14ம் தேதி கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகளிலும், பிப் 15ம் தேதி கும்பகோணம், தஞ்சை மற்றும் திருச்சி மாநகராட்சிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

மறுப்புறம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்ல்செல்வமும் வேட்பாளர்களை ஆதரித்து 7.2.2022 முதல் 15.2.2022 தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார.

அதன்படி, பிப் 7ம் தேதி மாலை 5 மணி அளவில் காஞ்சிபுரம் மாநகராட்சி, இரவு 7 மணி அளவில் வேலூர் மாநகராட்சி, பிப் 9ம் தேதி
காலை 10 மணி அளவில் ஓசூர் மாநகராட்சி, பிற்பகல் 12 மணிக்கு சேலம் மாநகராட்சி மற்றும் மாலை 4 மணி அளவில் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

பிப் 10ம் தேதி கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கரூர் மாநகராட்சிகளிலும், பிப் 11ம் தேதி திருச்சி, தஞ்சை, மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளிலும், பிப் 12ம் தேதி கடலூர் மாநகராட்சி, தென் சென்னை, சென்னை புறநகர், தாம்பரம் மாநகராட்சிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இதேபோல் பிப்.13ம் தேதி ஆவடி, பெரியார் நகர் (திருவொற்றியூர்) மற்றும் ராயபுரம் மாநகராட்சிகளிலும், பிப் 14ம் தேதி தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் நெல்லை மாநகராட்சிகளிலும், பிப் 15ம் தேதி சிவகங்கை மற்றும் மதுரை மாநகராட்சிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்."

இவ்வாறு அதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x