Published : 13 Jun 2014 09:44 AM
Last Updated : 13 Jun 2014 09:44 AM

சென்னையில் தொழில் அதிபரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்

தொழில் அதிபரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலை சேர்ந்த இருவரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:

சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் நாகராஜ் (38). பாரிமுனையில் 2-வது கடற்கரை சாலையில் ஷிப்பிங் கிளியரன்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவர் புதன்கிழமை மாலையில் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். டிரைவர் சரவணன் காரை ஓட்டினார்.

எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை யில் கார் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் நாகராஜின் காரை வழி மறித்தது. பின்னர் 6 பேரும் காருக்குள் ஏறி கத்தி முனையில் டிரைவர் சரவணனை மிரட்டி மீஞ்சூர் பகுதியில் ஒரு காட்டுப் பகுதிக்கு காரை ஓட்டச் சொல்லி நாகராஜை கடத்தி சென்றனர்.

பின்னர் நாகராஜிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறியதால், அவரை அடித்து உதைத்தனர். பின்னர் ரூ.10 லட்சம் பணம் கேட்டனர். அதை ஏற்பாடு செய்வதாக நாகராஜ் கூறி தனது மனைவி ஜெனிதாவை போனில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் பணத்தை தனது மேனேஜரிடமிருந்து வாங்கி வருமாறு கூறினார்.

இந்நிலையில் கணவர் கடத்தப் பட்ட சம்பவம் குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஜெனிதா புகார் தெரிவித்தார். வடக்கு மண்டல இணை ஆணையர் தர் ஆலோசனையின் பேரில் கடத்தல்காரர்களிடம் பேசிய ஜெனிதா “பணம் தயாராக இருக்கிறது, எங்கே வந்து தர வேண்டும்“ என்று கேட்டார்.

பின்னர் எண்ணூர் துறைமுகம் அருகே ஜெனிதாவை அந்த கடத்தல் கும்பல் வரவழைத்தது. அவரிடம் இருந்து பணப் பெட்டியை வாங்கு வதற்காக மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் வந்தனர். அப்போது மறைந் திருந்த காவல் துறையினர் அவர் களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களின் பெயர் சரண்ராஜ், கணேஷ் என்பதும், வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. கூட்டாளிகள் போலீஸில் சிக்கியதை அறிந்த முத்துகிருஷ்ணன், ராஜீ, பாலமுருகன், குமரேசன் ஆகிய 4 ரவுடிகளும் சேர்ந்து நாகராஜை கடுமையாக தாக்கிவிட்டு மணலி எம்.எப்.எல். நிறுவனம் அருகே அவரை விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

அங்கிருந்து மனைவி ஜெனிதாவுக்கு நாகராஜ் போன் செய்ய போலீஸார் அந்த இடத்துக்கு சென்று நாகராஜை மீட்டனர். தப்பியோடிய 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. வியாசர் பாடியை சேர்ந்த ராமு என்ற ரவுடியின் உத்தர வின் பேரில்தான் நாகராஜ் கடத்தப் பட்டுள்ளார். இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x