Published : 26 Apr 2016 03:51 PM
Last Updated : 26 Apr 2016 03:51 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இல்லாமல், தேசிய நெடுஞ்சாலை சந்திப்புகளில் மட்டுமே பிரச்சாரம் நடைபெற்றதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த திமுக பொருளாளர் ஸ்டாலின், குமரி மாவட்ட எல்லையான களி யக்காவிளையிலிருந்து நேற்று முன்தினம் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதலில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியை ஆதரித்தும், பின்னர் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாரை ஆதரித்து மார்த் தாண்டத்திலும் அவர் பேசினார்.
தொடர்ந்து குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்சை ஆதரித்து முளகுமூடில் வாக்கு சேகரித்தார்.
கிள்ளியூர் தொகுதிக்கு உட் பட்ட இடங்கள் அனைத்தும் மார்த் தாண்டத்தை தாண்டிய பகுதிக ளிலேயே உள்ளது. இதேபோல் குளச்சல் தொகுதியின் கடைக் கோடி பகுதியில் முளகுமூடு உள்ளது. இந்நிலையில், களியக் காவிளையில் இருந்து முளகுமூ டுவரை நடைபெற்ற இந்த பிரச்சாரம் அனைத்தும் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே நடைபெற்றது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் அவரது பிரச்சாரப் பயணத்திட்டம் அமைக்கப்படவில்லை.
இதேபோன்று பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மனோதங்கராஜுக்கு தக்கலைப் பகுதியிலும், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனுக்கு வடசேரி, கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு ஆரல்வாய்மொழியில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சார இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் இல்லாத தேசிய நெடுஞ்சாலையாகவே இருந்தன.
தொண்டர்கள் ஏமாற்றம்
6 தொகுதிகளிலும் உள்ள முக்கிய பகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளாததால் திமுக வேட்பாளர்கள், தொண் டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து திமுக தொண்டர் ஒருவர் கூறும்போது, “இந்த முறை ஸ்டாலின் பிரச்சாரப் பயணத் திட்டம், களியக்காவிளையில் இருந்து காவல்கிணறு வரை தேசிய நெடுஞ்சாலையிலேயே இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
வாக்காளர்கள் அதிக அளவில் வசிக்கும் கன்னியாகுமரி, கொட் டாரம், குளச்சல், கருங்கல், திங்கள் நகர் போன்ற இடங்களில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT