Published : 05 Feb 2022 11:16 AM
Last Updated : 05 Feb 2022 11:16 AM

மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி: தலைமைக்கு புகார்கள் அனுப்பிய மூத்த நிர்வாகிகள்

மதுரை மாநகராட்சி தேர் தலில் போட்டியிடும் 77 வேட் பாளர்கள் பட்டியலை திமுக அறிவித்துள்ளது. இதில் குற்றப் பின்னணி மற்றும் தகுதியில்லாத பலர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார் களை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: மாநகராட்சியின் 100 வார்டுகளில் திமுக கூட்டணிக்கு 23 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 77 வார்டுகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள் ளனர். அமைச்சர் பி.மூர்த்தி தனது கட்டுப்பாட்டில் உள்ள 14 வார்டுகளுக்கும் கட்சியின் வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட சரியான வேட்பாளர்களை அறிவித் துள்ளார். இதேபோல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய சட்டப்பேரவை தொகு திக்குட்பட்ட வார்டுகளுக்கு வேட் பாளர்களை தேர்வு செய்தார். சின்னம்மாள், அருண்குமார் உள்ளிட்ட சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதைத் தவிர்த்து, பெரிய அளவில் குறையில்லை. புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் தனது கட்டுப்பாட்டில் உள்ள 15 வார்டுகளில் அறிவிக்கப்பட்ட வேட் பாளர்களிலும் பெரிய அளவில் அதிருப்தி எழவில்லை.

அதேநேரம் மதுரை மேற்கு, வடக்கு, தெற்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட 55 வார்டு களில் அறிவிக்கப்பட்ட பல வேட் பாளர்கள் குற்றப் பின்னணி உள் ளவர்கள். தகுதியில்லாத சில வார்டுகளின் வேட்பாளர்களிடம் கணிசமாக பணம் பெற்றுக்கொண்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 வார்டுகளில் தலா ரூ.50 லட்சம் வரையில் பேரம் பேசப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. மற்ற சில வார்டுகளில் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என சீட் விற்கப்பட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.வேலுச்சாமி சிபாரிசு செய்த ஒருவருக்குக்கூட வாய்ப்பு அளிக்காததால் விரக்தியில் வெளியூர் சென்றுவிட்டார். கட்சியில் தொடர்பில்லாத சிலருக்கும் சீட் வழங்கியுள்ளனர். மகேந்திரன், ரவி, ஆழ்வார் உள்ளிட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. 2 அமைச் சர்கள் மற்றும் மூத்த நிர்வாகி கள் சிபாரிசு செய்த சிலர் புறக் கணிக்கப்பட்டுள்ளனர். ஒரு பொறுப்பாளர் மிரட்டலுக்கு பயந்து சிலருக்கு சீட் வழங்கும் அளவுக்கு நிலைமை இருந்துள்ளது. இது குறித்து பலரும் கட்சி தலைமைக்கு புகார்களை அனுப்பி உள்ளனர்.

வேட்பாளர்கள் குறித்து உளவுப்பிரிவு போலீஸாரின் குறைந்தபட்ச விசாரணைக்குக்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் பலர் பட்டியலிலிருந்து உடனே நீக்கப்பட்டிருப்பார்கள்.

2 அமைச்சர்கள் உள்ளிட்ட 5 பொறுப்பாளர்கள் இருந்ததே இக்குழப்பத்துக்கு காரணம். ஒரே நிர்வாகி தலைமையில் வேட்பாளர் தேர்வுக்குழுவை கட்சித் தலைமை அமைக்கவில்லை.

கட்சியினரின் குறைகளைத் தீர்க்க சிறப்பு மையம் அமைக்கப் பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார். இந்த மையத்துக்கு அனுப்பப்பட்ட எந்த குறைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. கட்சித் தலைமை எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இந்தக் குறை தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும், இவ்வாறு அவர் கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x